களனி மேம்பாலத்தில் இருந்து கவிழ்ந்த எரிபொருள் பவுசர் !இன்று (13ம் திகதி) அதிகாலை 2.00 மணியளவில் களனி, ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே மேம்பாலத்தின் மீது பயணித்த எரிபொருள் பவுசர் ஒன்று சாரதிக்கு ஏற்பட்ட தூக்கம் காரணமாக பாலத்தில் இருந்து கீழுள்ள வீதிக்கு குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதில் இருந்த எரிபொருள் கையிருப்பு வேறு ஒரு பவுசர் வாகனத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்தின் போது பவுசர் சாரதி மாத்திரமே பயணித்துள்ளதுடன், காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் பேலியகொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.