ஏறாவூர் பகுதியிலுள்ள வீடொன்றில் கூரையில் இரண்டு கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவை வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டுகள் என ஏறாவூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் இவ்வீட்டைக் கொள்வனவு செய்தவர் மேற்கூரையை சீர்செய்யச் சென்ற போது இந்த கைக்குண்டுகளைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பொலிஸ் குழுவொன்று அங்கு சென்று அவற்றை மீட்டதாக மேலும் தெரிவிக்கப் படுகின்றது.