கைக்குண்டுகள் மீட்கப்பட்ட வீட்டிற்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது - பிரசாந்தன் - TMVP பொதுச்செயலாளர்


ஏறாவூர் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து யுத்த காலத்தில் கைவிடப்பட்ட இரு கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பில் செய்திகள் வெளியாகியிருந்தன .
குறித்த வீட்டினை வாங்கிய புதிய உரிமையாளர் அவ்வீட்டில் திருத்த வேலைகளில் ஈடுபட்டபோது மேற்படி குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
அதுபற்றிய தகவல்களை வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்தமையை அடுத்தே மேற்படி செய்திகள் வெளியாகியுள்ளன.
முப்பது ஆண்டுகளுக்கு மேல் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற ஒரு நாட்டில் யுத்தத்துக்கு பின்னரான காலப்பகுதியில் இவ்வாறான ஆயுத தளபாட எச்சங்கள் கண்டு பிடிக்கப்படுவது இயல்பானது. இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்னரும் பல்வேறு இடங்களில் இடம் பெற்றுள்ளன.

குறித்த வீட்டுக்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
மட்டக்களப்பு நகர் வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள தலைமையகத்தைத் தவிர வேறெந்த அலுவலகமும் எமக்கில்லை என்பதனை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.


பூ. பிரசாந்தன்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி