இரட்டை யானை குட்டிகளை பார்வையிட்டார் அமைச்சர் !


பின்னவல யானைகள் சரணாலயத்தில் சுரங்கிக்கு பிறந்த இரட்டை யானை குட்டிகளை வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர பார்வையிட்டுள்ளார்.

இதன்போது பின்னவல யானைகள் சரணாலயத்தின் குறைபாடுகள் மற்றும் பணிகள் தொடர்பிலான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமும் இடம்பெற்றுள்ளது.