கிழக்கில் பாடசாலைகளில் கல்வித்தரத்தை மேலும் விருத்தி செய்ய மாகாண கல்வித்திணைக்களம் பல்வேறு நடவடிக்கை !



(சிஹாரா லத்தீப் ) .
கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி கல்வி நிருவாகத்தினை வினைத்திறன்மிக்கதாக உயர்த்த மாகாண கல்வித்திணைக்களம் பல்வேறு வலுவூட்டல் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றது .

மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளை நாயகத்தின் வழி காட்டுதலில் வலயக்கல்விப் பணிப்பாளர் களின் மேற்பார்வையில் இந்த வலுவூட்டல் பயிற்சிகள் தற்பொழுது நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருக்கின்றன.

இப்பயிற்சிகள் ஊடாக அதிபர்களுக்கு நிர்வாகம் நிதிமுகாமைத்துவம், ஆளணி முகாமைத்துவம் ,  உளவள ஆலோசனை மேம்பாடு, சத்துணவு அபிவிருத்தி உட்பட பல்வேறு துறைகளில் . அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வலுவூட்டல் பயிற்சிகள் வழங்கப்பட எதிர்பார்க்கப்படுவதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி பிள்ளை நாயகம் தெரிவித்தார்.

இந்த விசேட திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள 65 பாடசாலைகளில் அதிபர்களுக்கான விசேட வலுவூட்டல் பயிற்சிநெறி கடந்த மூன்று தினங்களாக மட்டக்களப்பு சத்துருக் கொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் நடாத்தப்பட்டது .மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்வித் துறை சார்ந்த பல்வேறு நிபுணர்களினால் பயிற்சிகள் வழங்கப்பட்டன .
இந்த வலுவூட்டல் பயிற்சிகளை பூர்த்திசெய்த.பாடசாலை அதிபர்களுக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி பிள்ளை நாயகம் அன்று சான்றிதள்களை வழங்கி வைத்தார்..

இங்கு பணிப்பாளர் கருத்து வெளியிடுகையில் ;-மாகாண மட்டத்தில் பின்தங்கிய தரத்திலிருந்த கல்விப்பெறுபேறுகளை இன்று முதன்மை நிலைக்கு கொண்டு வந்த இலக்கினை தொடர்ந்தும் தக்கவைக்க மேலும் விசேட வலுவூட்டல் பயிற்சிகளை.வழங்க ஆளுநரின் ஆலோசனையில் மாகாண கல்வி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத்தெரிவித்தார்.