# .

சிறப்புற இடம்பெற்ற அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கத்தின் வைரவிழா பட்டமளிப்பும் சைவ மாநாடும்!அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் நடாத்திய வைரவிழா சைவப்புலவர் பட்டமளிப்பு விழாவும் சைவ மாநாடும் ஞாயிற்றுக்கிழமை 2023.01.22 தொடக்கம் மாலை 6.00மணி வரை தென்மராட்சி சாவகச்சேரி பூமாரி மண்டபத்தில் அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தலைவர் சைவப்புலவர் சி.கா.கமலநாதன் தலைமையில் இடம்பெற்றது.

காலை அமர்வு சைவப்புலவர் மு.திருஞானசம்பந்தபிள்ளை அரங்க நிகழ்வாக இடம்பெற்றது. சாவகச்சேரி புராதன வாரிவானேஸ்வரர் ஆதியில் எழுந்தருளி இருந்த இடத்தில் அமைந்துள்ள சிவன்கோவில் வழிபாட்டின் பின்னர் சந்தான குரவர்கள் எழுந்தருள விருந்தினர் விழா மண்டபம் வருகைதந்தனர்.அகச்சந்தான குரவர்கள் புறச்சந்தான குரவர்களிற்கான குபூசை நிகழ்வினைத் தொடர்ந்து இணுணையூர் சகோதார்கள் அழகேசன் அமிர்தலோஜன் , அழகேசன் அமிர்தசிந்துஐன் ஆகியோரது சிவஞானபோத இசை ஆராதனை நிகழ்வு இடம்பெற்றது.வரவேற்பு நடனத்தினை செல்வி. ஸ்ருதி சிவகுமாரகுருக்கள் , செல்வி. மஹதி கைலாஜராஜகுருக்கள் வழங்கினார்கள்.அரங்கத்திறப்புரையினை உபதேர்வுச்செயலாளர் சைவப்புலவர் லீலாவதிஅருளையா வழங்கினார்.

பிரதம விருந்தினராக பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா துணைவேந்தர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கலந்துகொண்டார். நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிய ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் , தமிழ்நாடு தர்மபுரஆதீனம் ஸ்ரீமத் மீனாட்சி சுந்தர தம்பிரான் சுவாமிகள் , சிவகுருநாதவேதாந்தபீடம் ஸ்ரீவேத வித்தியா சாகரர் சுவாமிகள் திருமுன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலாநிதி.பொ.சந்திரசேகரம் தலைவர் சைவசித்தாந்தத்துறை இந்துக் கற்கைகள் பீடம். பல்கலைக்கழகம் கௌரவ விருந்தினர். த.கிருபாகரன் வலயக்கல்வி பணிப்பாளர். தென்மராட்சி விசேட அதிதிகளாக சிவஸ்ரீ கு.ஸ்ரீகாந்தக் குருக்கள் பிரதரம குருஆதீனகர்த்தா மீசாலை வடக்கு ஆலடிப்புலம்ஸ்ரீ நடராஜ கந்தசுவாமி ஆலயம் , சிவஸ்ரீ இ.குமாரசுவாமிக் குருக்கள்பிரதமகுரு வரணி சிட்டிவேரம் கண்ணகை அம்பாள் ஆலயம் சா.உருத்திரபசுபதி சைவசித்தாந்த பண்டிதர் செ.சியபாதம் அவர்கள் வி.தயாபரன் சைசவப்புலவர் வ.தயாபரசிவம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சைவாகம பூஷணம் விருதினை சிவஸ்ரீ கு.ஸ்ரீகாந்தக் குருக்கள் , சிவஸ்ரீ க.குமாரசுவாமிக் குருக்கள் , சிவநெறிப் புரவலர் விருதினை வி.தயாரான் சிவநெறிப்பிரகாசர் விருதினை சமஜஜோதி க.நிஜலிங்கம் பௌராணிக ஞானச்செம்தல் விருதினை சா.உருத்திரபசுபதி , சைவசித்தாந்த பண்டிதர் செ.சிவபாதம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

வைர விழாச் சைவநாதம் மலர் வெளியீட்டுரையினை பிரம்மஸ்ரீ சு.நவநீதகிருஷ்ணன் விரிவுரையாளர் சமயம்கிருந்த்துறை இந்துகு கற்கைகள் பீடம் நயப்புரையினை ஈ.குமரன் சிரேஷ்ட விரிவுரையாளர் தமிழ்த்துறை ஆகியோர் வழங்கினார்கள். முதற்பிரதியினை கலாநிதி வைத்தியலிங்கம் சிவராசா பிரபலதொழிலதிபர் சிவாரேடிங்கோ கொழும்பு யாழ்ப்பாணம் அவர்கள் பெற்றுக்கொண்டார். நன்றியுரையினை அகில இலங்கை சைவப்புலவர்சங்கச் செயலாளர் சைவப்புலவர் செ.த.குமரன் வழங்கினார். நிகழ்வினை சைவப்புலவர் சங்கப்பொருளாளர் சைவப்புலவர் ச.முகுந்தன் நெறிப்படுத்தினார்.

மாலை அமர்வு சைவப்புலவர் சு.செல்லத்துரை அரங்காக சைவப்புலவர் சிவானந்தசோநி ஞானசூரியம் (உபதலைவர் அகில இலங்கைசைவப்புலவர் சங்கம்) தலைமையில் இடம்பெற்றது. முதன்மைவிருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாழ்நாட் பேராசிரியர் ப.கோபாலகிருஷ்ண ஐயர் சிறப்பு விருந்தினர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிந்தாந்தத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி திருமதி.விக்னேஸ்வரி பவனேசன் ஆகியோர். கலந்துகொண்டார்கள். அரங்கத் திறப்புரையினை சைவப்புலவர் க.குணரத்தினம் வரவேற்புரையினை சைவப்புலவர் க.பத்மானந்தன் வாழ்த்துரையினை சு.பரமானந்தம் பீடாதிபதி யாழ்ப்பாணம் தேசிய கல்லியற் கல்லூரி ஆகியோர் வழங்கினர்

கலை நிகழ்வுகளாக வைரவிழாச் சைவசமயப் போட்டிகளில் முதலிடம் பெற்றவர்களது கலை நிகழ்வுகளான புராண படனம் பண்ணிசை

கதாப் பிரசங்கம் மிருதங்கம் வில்லுப்பாட்டு நாடகம் இடம்பெற்றது. வைரவிழார் சைவசமயத் திறன் விருத்திப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களிற்கான பரிசளிப்பு நிகழ்வு இடம்பெற்றது. நன்றியுரையினை சைவப்புலவர் செ.த.குமரன் வழங்கினார்.

2021 ஆம் ஆண்டு சித்தியடைந்த சைவப்புலவர்கள்-
வேலாப்போடி மகேசரெத்தினம் (மட்டக்களப்பு)
திருமதி விஜயலட்சுமி இராமச்சந்திரா (மட்டக்களப்பு) 
 திருமதி. இராதா ஞானரெத்தினம் (மட்டக்களப்பு)
 திருமதி. பத்மலோஜினி ஸ்ரீராமன் (யாழ்ப்பாணம்) 
கலாநிதி இளையதம்பி ஜெயந்திரன் (மட்டக்களப்பு)

2021 சித்தியடைந்த இளஞ்சைவப்புலவர்கள் 
செல்வி. சேனாபதி தர்மிதா (மட்டக்களப்பு) 
செல்வி கமலநாதன் மிதுஷ்சனா (மட்டக்களப்பு) செல்வி தவநேசன் கியோமிதா (மட்டக்களப்பு)
 செல்வி. உதயகுமார் அஜித்தா (மட்டக்களப்பு)
 செல்வி. கிருஸ்ணகுமார் ஜிதர்சினி (மட்டக்களப்பு) செல்வி கிருபராசா மேனுஜா (பொலன்னறுவை) 
 கிருபைரெத்தினம் சர்வேஸ்வரன் (மட்டக்களப்பு) 
 செல்வி. வடிவேல் கஸ்தூரி (மட்டக்களப்பு) 
செல்வி. சந்திரன் கஜிதா (மன்னார்) 
நித்தியானந்தன் பாபுதரன் (யாழ்ப்பாணம்) 
 கிருஸ்ணன் வரதராசன் (யாழ்ப்பாணம்) 
 செல்வக்குமார் கிருஸ்ணகுமார் (யாழ்ப்பாணம்) 
சிவறி குமாரசாமிசர்மா சுவாமிநாதசர்மா (யாழ்ப்பாணம்) 
யோகநாதன் சிவநந்தினி (மட்டக்களப்பு)

2022 ஆண்டு சித்தியடைந்த சைவப்புலவர்கள். 
திருமதி. செல்வராஜ் உதயகௌரி (கொழும்பு)
 திருமதி. இரத்தினேஸ்வரி சந்திரலிங்கம் (மட்டக்களப்பு) 
 பொன்னம்பலவாணர் கனகரத்தினம் (யாழ்ப்பாணம்) 
 திருமதி. புவனராணி இரகுநாதன் (யாழ்ப்பாணம்) 
 துரைசிங்கம் பிரபாசன் (யாழ்ப்பாணம்) 
திருமதி மகிபா வசிகரன் (யாழ்ப்பாணம்) 
திருமதி. சுந்தரமதி வேதநாயகம்(மட்டக்களப்பு) 
 சாம்பசிவம் நவீந்திரதாஸ் (திருகோணமலை) 
 மகேந்திரன் விமலகாந்தன் (பொலன்னறுவை) 
 திருமதி. மல்லிகா சிவராசா (கொழும்பு)

2022 ஆம்ஆண்டு சித்தியடைந்த இளஞ்சைவப்புலவர்கள் 
 வல்லிபுரம் பரமேஸ்வரம்பிள்ளை (யாழ்ப்பாணம்)
 செல்வி சரமினி கிருஸ்ணபிள்ளை (பொலன்னறுவை) 
 செல்வி ஜெயாளினி கந்தசாமி (பொலன்னறுவை) 
திருமதி. சிவப்பிரியா ராஜ்குமார் (யாழ்ப்பாணம்) 
மகேஸ்வரன் பவிதரன் (மட்டக்களப்பு) 
செல்வி. யதுஷா முருகேசு (பொலன்னறுவை) 
 செல்வி. பிரண்ஜா நேதீஸ்வரன் (கிளிநொச்சி) 
திருமதி. சந்திரவதனி தவராசா (யாழ்ப்பாணம்) 
தர்மராஜா சுதர்சன் (யாழ்ப்பாணம் 
 மாரிமுத்து ஸ்ரீகாந்தன் (பதுளை) 
 செல்வி. துர்க்கா சுப்பிரமணியம் (கொழும்பு) 
 கிருஸ்ணதாஸ் டனுஸ்காந் (மட்டக்களப்பு) 
 புலேந்திரன் தினேஸ்காந் (மட்டக்களப்பு) 
செல்வி. கீரத்தனா குருநாதபிள்ளை (அம்பாறை)  ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.