தவறுதலாக அதிக மாத்திரைகளை உட்கொண்ட வயோதிபபெண் பலி : மட்டக்களப்பில் சம்பவம்!

(மண்டூர் ஷமி)

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மெக்கலர் வீதி மட்டக்களப்பு பிரதேசத்தில் வயோதிபப்பெண் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டதனால் மரணமான சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

மெக்கலர் வீதி மட்டக்களப்பு பிரதேசத்தைச்சேர்ந்த இரண்டு பிள்ளைகளின்; தாயாரான (67) வதுடைய வரதராஜன் விஜயலெட்சுமி என்பவரே உயிரிழந்தவராவார்.

குறித்த பெண்; உயர் குருதியளுத்த நோயினால் பாதிக்கப்பட்டு நாளார்ந்தம் அதற்கான மாத்திரைகளை உட்கொண்டு வருவதாகவும் சம்பவ தினத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வழக்கம்::போல் குறித்த நோய்க்கான மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டிருந்ததாகவும் பின்னர் மயக்கமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரியின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்ற பதில் நீதிவான் வி.தியாகேஸ்வரன் அவர்களின் உத்தரவிற்கமைவான சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.; மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.