மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழில் சந்தையூடாக 60 மாற்றுதிறனாளிகளுக்கு தொழில் வாய்ப்பு!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) 

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மாவட்டத்தில் உள்ள  மாற்று திறனாளிகளுக்கான தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவதற்காக  தொழிற்சந்தை ஒன்றினை மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின்  ஏற்பாட்டில்  வை.எம்.எம்.ஏ மண்டபத்தில் இன்று (25) இடம் பெற்றது.

இதன்போது 60 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு தொழில் வாய்ப்புக்குறிய சகல பயிற்சி நெறிகளும் வழங்கி வைக்கப்பட்டதுடன் தங்களுடைய கல்வி மற்றும் பயிற்சிக்கு ஏற்றவகையில் தொழில்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஒவ்வொரு  பிரதேச செயலகத்திற்கும் 20 அங்கத்தவர் வீதம் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் 280 மாற்றுதிறனாளிகள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான கொடுப்பணவுடன்கூடிய இருநாள் செயலமர்வுகளாக தொழிற்பயிற்சிகள், வழிகாட்டல்கள், சுயவிபரக்கோவை தயாரிக்கும் முறை மற்றும் நேர்முகப்பரீட்சையினை எதிர்கொள்ளும் உக்திகள் என்பன பயிற்றுவிக்கப்பட்டிருந்தது. இவர்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 60 மாற்றுத் திறனாளிகளுக்கான தொழில் சந்தையே இன்று இடம்பெற்றது.

மாற்றுதிறனாளிகளுக்கான தொழில் வாய்பினை வழங்குவதற்கு தொழில் வழக்கும் 10 இற்குமேற்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

 பொருளாதார ரீதியில் வலுப்படுத்தி அவர்களை சமூகத்தில் சிறந்த வகிபாகத்தை வழங்குவதற்கு  மாவட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கான, தொழில் சந்தை வழங்குவது இதுவே முதல் தடவையாகும்.

 இந்நிகழ்வில்  மனித வள வேலைவாய்ப்பு  திணைக்கள  மாவட்ட  இணைப்பாளர் வி.மைக்கல் கொலின் மற்றும் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர், மாவட்ட செயலக உத்தியோகத்தர் என பலர் கலந்து கொண்டதுடன், இத் தொழிற்சந்தை நடத்துவதற்குத்தேவையான அனைத்து நிதி அனுசரனையினை சர்வதேச தொழிலாளர் அமைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.