கனடா செல்ல முயன்ற பத்து இலங்கையர்கள் புதுடில்லியில் கைது!

இந்திய குடிவரவுகுடியகல்வு துறையினரைஏமாற்றிவிட்டு சட்டவிரோதமாக கனடா செல்ல முயன்ற பத்து இலங்கையர்கள் புதுடில்லி விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்திய குடிவரவுகுடியகல்வு துறை அதிகாரிகளை ஏமாற்றி இலங்கையர்களை  புதுடில்லி விமானநிலையத்தின் ஊடாக கனடாவிற்கு  அனுப்ப முயன்ற முகவர்களுடன்தொடர்புவைத்திருந்த பத்து இலங்கையர்கள் புதுடில்லியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் வசிக்கும் மகேந்திரராஜா என்ற இலங்கையை சேர்ந்த முகவரும்  கைதுசெய்யப்பட்டுள்ளார் என இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எய்ரோ நகருக்கு அருகில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர்களால் தாங்கள் ஏன் புதுடில்லிவந்தோம் என்ற சரியான காரணத்தை தெரிவிக்க முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் அடையாளங்களை உறுதி செய்வதற்கான ஆவணங்களை கையளிக்குமாறு கேட்டோம் ஆனால் அவர்களால் அவற்றை காண்பிக்க முடியவில்லை,இதன் பின்னர் சந்தேகம் காரணமாக மேலதிக விசாரணைகளிற்காக அவர்களை பொலிஸ்நிலையத்திற்கு கொண்டுவந்தோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீங்கள் சென்னை விமானநிலையத்திற்கு வாருங்கள் அங்கு ஒருமுகவர்நீங்கள் கனடாவிற்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்வார் என இலங்கையர்களிற்கு தெரிவிக்கப்பட்டதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையர்கள் வெவ்வேறு தினங்களில் சென்னை விமானநிலையத்திற்கு வந்துள்ளனர்- மகேந்திரராஜா ஞாயிற்றுக்கிழமை விமானநிலையத்திற்கு சென்றுள்ளார்.

இதன்பின்னர் இவர்களை புதுடில்லியில் பஹர்ஹான்ஜ் பகுதியில் உள்ள விடுதிக்கு அழைத்து வந்துள்ளனர் என தெரிவித்துள்ள புதுடில்லி பொலிஸார் அன்று ஏதோ பிரச்சினையால் கனடா செல்ல முடியாது உங்கள் ஹோட்டலிற்கு திரும்பி செல்லுங்கள் என அவர்களிற்கு தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

அனைவரும் இந்திய குடிவரவுகுடியகல்வு துறையை  ஏமாற்றி கனடாவிற்கு செல்ல முயன்றுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.