பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற தீர்மானம்!

தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்ற தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.பி.க்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், எம்.பி. ரஹீம் விவகாரம் தொடர்பில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும், அனைத்து எம்.பி.க்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியதாக கருதும் எம்.பி.க்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

“எம்.பி. ரஹீமுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சித் தலைவர்கள் முடிவு செய்ததோடு, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, அலி சப்ரி ரஹீமை வெளியேற்றலாம் என்ற கருத்தையும் கொண்டிருந்தார். எனவே, எம்.பி. ரஹீமுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் என தீர்மானித்துள்ளோம் என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர்..

எம்.பி. ரஹீம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரை வெளியேற்ற வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது என ஆளும் கட்சி எம்.பி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அநுர டேனியல், மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவின் காலத்தில் வெளியேற்றப்பட்டது போன்று ஊழல் குற்றச்சாட்டின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை வெளியேற்றியதற்கு முன்னுதாரணமும் உண்டு. எனவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.