மரக்கிளை தலையில் விழுந்து 17 வயதுடைய மாணவி மரணம்!


தலவாக்கலை – தவலந்தன்ன வீதியில் புடலுஓயா, பலுவத்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து சென்ற பாடசாலை மாணவியின் தலையில் மரக்கிளை ஒன்று விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதில், படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அகரபத்தனை பம்பரகலை தோட்டத்தில் வசித்து வந்த விஜயராஜ் திவ்யராணி (வயது 17) என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கண்டியில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து தனது தந்தையுடன் அகரபத்தனை பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த போது இவ்வாறு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.