
வாகன போக்கு வரத்துப் பொலிஸார் வீதி பரிசோதனையின் போது வாகன அனுமதிப்பத்திரம்இ காப்புறுதி சான்றிதழ் ஆகியவற்றுடன் புகைபரிசோதனை சான்றிதழையும் பரிசோதிக்கின்றனர் புகைபரிசோதனை சான்றிதழ் சமர்பிக்காதவர்களுக்கு தண்டப்பணம் அறவிடப்படுகின்றது.
புகைபரிசோதனை சான்றிதழ் இருந்தும் வாகனத்திலிருந்து புகை வெளியேறுமேயானால் புகைபரிசோதனை சான்றிதழ் இரத்து செய்யப்டுமென மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் ஜெனரல் பி. சீ. எல். தர்மபிரிய தெரிவித்துள்ளார்.
சுற்றாடல் அமைச்சுஇ மோட்டார் வாகன தினணக்களம் மற்றும் இலங்கை பொலிஸார் கூட்டாக இணைந்து எமது நாட்டில் சூழல் மாசடைவதனை தடுப்பதற்கும் எரிபொருட்கள் வீண்விரயமாவதை தவிர்ப்பதற்காகவுமே இத்திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.
பெற்றோல் மற்றும் டீசலில் காணப்படும் காபன்இ ஐதரோ காபன்இ காபன் மொனோ ஒட்சைட்டு போன்றவை பற்றியே புகைபரிசோதனையின் போது கூடிய கவனம் செலுத்தப்படுகின்றது.
வீவசாய நோக்கத்திற்காக பயன்படுத்தும் நோக்கில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் இப்புகைபரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லையென மோட்டார் வாகன திணைக்களம் அறிவித்துள்ளது