மட்டக்களப்பு - மாங்காடு பகுதியில் விபத்து - இருவர் வைத்தியசாலையில் அனுமதி !
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பகுதியில் நேற்று (14) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் மாங்காட்டில் துவிச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும், துவிச்சக்கர வண்டியில் பயணித்தவரும் படுகாயமடைந்த நிலையில், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.