இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்




இந்தோனேசியாவின் மேற்கு பப்புவா பகுதியில் இன்று (12) பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
 
ரிக்டர் அளவுகோலில் இது 6.5 ஆக பதிவானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.