இந்த விபத்து நேற்று (10) இரவு நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு ஊறணியைச் சேர்ந்த நாகேந்திரன் கரிகரராஜ் (23) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர், மனைவியுடன் ஏற்பட்ட தகராறை அடுத்து, நேற்றிரவு தண்டவாளத்தில் நின்று மனைவியுடன் கைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது, மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து, சடலத்தை மீட்டு ஏறாவூர் ரயில் நிலையத்தில் ஒப்படைத்த பின்னர், ரயில் கொழும்பு நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தது.
இது தொடர்பாக ஏறாவூர் மற்றும் கொக்குவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.