கொக்கட்டிச்சோலை திருத்தான்தோறீஸ்வரர் ஆலயத் தேரோட்ட நிகழ்வு புகைப்படங்கள்

 (மா.சசி)
 வரலாற்றுச் சிறப்பு மிக்க கொக்கட்டிச்சோலை திருத் தான்தோறீஸ்வரர் ஆரயத் தேரோட்டப் பெரு விழா இன்று பிற்பகல் இடம்பெற்றது. இன்று பிற்பகல் இடம்பெற்ற பூசையினைத் தொடர்ந்து புல்லாயிரக் கணக்கான பக்கர்களின் அரோகரா! அரோகரா! ஏன்ற பக்திப் பரகோசத்தின் மத்தியில் விநாயகப் பெருமான் மற்றும் தான்தோறீஸ்வரர் பார்வதி சமேதரராய் வெளி வீதி வந்து விநாயகப் பெருமான் பிள்ளையார் தேரிலும்,சிவன் பார்வதி சமேதரராய் சித்திரத் தேரிலும் ஏற பக்தர்கள் வடம் பிடிக்க கால் புதையும் பணலில் ஒரு வித சத்தத்துடன் தேர் ஓடிய காட்சி அனைவரையும் உடல் சிலுக்க வைத்தது. கடந்த 20 ஆம் திகதி அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலய திருவிழா தொடர்ந்து ஆலய திருவிழா மற்றும் குடிமக்களின் திருவிழா இடம்பெற்று வந்ததுடன் இன்று தேரோட்டம் இடம்பெற்றது. தேரோட்டத்தினைத் தொடர்ந்து இரவு 7.00 மணிக்கு முனைக்காட்டு எல்லையில் உள்ள வீரபத்திரர் ஆலயத்தில் இடம்பெறவுள்ள திரு வேட்டையினைத் தொடர்ந்து நாளை காலை இடம்பெறும் தீர்த்தோர்ச்சவத்தினை அடுத்து மாலை கொடி இறக்கத்துடன் மகோற்சவம் நிறைவு பெறவுள்ளது.