கல்முனை மாநகரசபையின் நடவடிக்கை தொடர்பில் த.தே.கூ சந்திப்பு

கல்முனை மாநகரசபையால்  சட்டவிரோத கட்டிடங்களை அகற்றும் நடவடிக்கை தொடர்பில்  அம்பாறை மாவட்ட மாகாண சபை உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க அந்த இடத்தை பார்வையிட வந்த மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா அவர்களுடன், அம்பாறை மாவட்ட மாகாண சபை உறுப்பினர்களான இராஜேஸ்வரன் மற்றும் கலையரசன் அவர்களும் சம்பவ இடத்தை கல்முனையின் எல்லை காவலன் ஏகாம்பரம் அவர்களின் வழிகாட்டலில் சென்று பார்வையிட்டதுடன், இது தொடர்பில் மாகாண ஆளுநருக்கும், முதலமைச்சருக்கும், உள்ளுராட்சி ஆணையாளருக்கும் அறிவித்துள்ளதாக மாகாணசபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் அவர்களின் கவனத்துக்கும் கொண்டு செல்லவுள்ளதாக மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா தெரிவித்தார்.

மாகாண சபை உறுப்பினர்களான இராஜேஸ்வரன் மற்றும் கலையரசன் மற்றும் மட்டு பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா  அவர்களும் இது தொடர்பில் கல்முனை மாநகர முதலவருடனும் பேசியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி : http://www.battinews.com/2013/03/blog-post_7962.html