தென்கிழக்கு பல்கலைக்கழக இப்தார் நிகழ்வு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வில் இம்முறை  பல்சமய பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர். புனித நோன்பை முன்னிட்டு தென்கிழக்கு பல்கலைக்கழகம்   நடாத்திவரும் இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வு இன்று 25ம் திகதி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

பல்கலைக்கழக  உபவேந்தர் கலாநிதி எம்.எஸ்.எம்.இஸ்மாயில் தலைமையில் பல்கலைக்கழக  வளாகத்தில் நடைபெற்ற இவ்வைபவத்தில் முன்னதாக அக்கரைப்பற்றைச் சேர்ந்த அமீர் மௌலவி பயான் ஓதினார்.
பல்கலைக்கழக பதிவாளர் சத்தார் உதவிப்பதிவாளர் தையூப் உள்ளிட்ட பல்கலைக்கழக உயர்நிருவாகிகளும் கலந்து சிறப்பித்தனர்.
பல்கலைக்கழகத்தில் பயிலும் பல் சமயங்களையும் சேர்ந்த 1500 மாணவ மாணவியர் கலந்துகொண்டனர்.
இப்தார் நிகழ்வில் சமாதானத்திற்கான சமயங்களின் அம்பாறை மாவட்ட பேரவையின் தலைவர் டாக்டர்.எம்.ஜ.எம்.ஜெமீல் செயலாளர் வி.ரி.சகாதேவராஜா உபதலைவர் வண.ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் பொருளாளர் பாஸ்ரர் எஸ்.கிறிஸ்தோபர் இராணுவத்தின் 631 வது படையணியின் கட்டளையிடும் அதிகாரி கேர்ணல். பியந்h கமகே மேஜர் நவரத்ன உள்ளிட்ட பாதுகாப்பு உயரதிகாரிகள் மற்றும்  பல அதிகாரிகள் மற்றும் பிரமுகர்களும்  பல்கலைச் கல்விச் சமுகத்தினரும் கலந்துகொண்டனர்.




 





(படங்கள் உதவி- வி.ரி.சகாதேவராஜா)