சுபோதினி குழு அறிக்கையின் பரிந்துரைக்கு அப்பாற்பட்ட வகையில் கல்விச் சேவையில் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் - சம்பள முரண்பாட்டுக்கு அரச சேவை ஆணைக்குழு ஊடாக தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (08) வியாழக்கிழமை நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட உறுப்பினர் சானக மாதுகொட, ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கு கடந்த அரசாங்கத்தால் சுபோதினி குழு நியமிக்கப்பட்டது,
சுபோதினி குழுவின் பரிந்துரைக்கு அமைய ஆசிரியர் - அதிபர் சம்பளம் மூன்றில் ஒரு பங்காக அதிகரிக்கப்பட்டது.மிகுதி இரண்டு பகுதி இதுவரை காலமும் அமுல்படுத்தப்படவில்லை.உத்தேச புதிய கல்வி சபை ஊடாக இந்த சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு காணப்படுமா, என கேள்வியெழுப்பினார்.
இதற்கு எழுந்து பதிலளித்த கல்வி அமைச்சரான பிரதமர், ஆசிரியர் - அதிபர் சேவையில் மாத்திரமல்ல அரச சேவையில் சகல துறையிலும் காணப்படும் சம்பள பிரச்சினைக்கு 2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக சம்பளம் அதிபரிக்கப்பட்டுள்ளது.
சுபோதினி குழுவின் பரிந்துரைக்கு அப்பாற்பட்ட வகையில் கல்விச் சேவை உத்தியோகத்தர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் - அதிபர் சேவையில் நிலவும் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செவுவுத் திட்டத்தின் ஊடாக அரச சேவையாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டார்.

.jpg)