
பேராசிரியர் Dr. தம்பிநாதபிள்ளை துஷ்யந்தன் அவர்களுக்கு பிரித்தானியாவின் உயரிய "நைட்" (Sir) பட்டம் வழங்கி கௌரவிப்பு.
"Knights Investiture & Awarding Ceremony - 2026" நிகழ்வு Taj Samudra கொழும்பில் சனிக்கிழமை (12) நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது, உயர் சர்வதேச கற்கை நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் Dr. தம்பிநாதபிள்ளை துஷ்யந்தன், பிரித்தானிய பாரம்பரிய வழக்கப்படி முழங்காலிட்டிருந்து, அவர்களின் தோள்களில் வாளினால் தொட்டு உத்தியோக பூர்வமாக, பிரித்தானியாவின் உயரிய "நைட்" (Sir) பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
பிரித்தானியாவின் "நைட்" (Knight) பட்டம் என்பது, பிரிட்டிஷ் பேரரசால் நாட்டிற்கும், சமூகத்திற்கும் மிகச்சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் உயரிய கௌரவமாக, பிரிட்டன் பேரரசால் அதிகாரப்பூர்வமாக இந்த பட்டம் சூட்டப்படுகிறது. இந்த பட்டத்தினை பெறுபவர்கள், தங்களது பெயருக்கு முன்னால் "சேர்" (Sir) என்ற கௌரவத்தினை பெற்றுக் கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.













.jpg)
.jpeg)
