மட்டக்களப்பில் இலவச அமர ஊர்தி சேவை ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் இலவச அமர ஊர்தி சேவை இன்று (10) வியாழக்கிழமை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

களுதாவளையில் அமைந்துள்ள பிரதேச சபை வளாகத்தில் வைத்து இச்சேவை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரத்தித் தவிசாளர் வசீகரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், உத்தியோகஸ்த்தர்கள் என பலரும் கலந்து கெண்டிருந்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் ம.வினோராஜ், இன்றிலிருந்து தமது பிரதேச சபையினால் இவச சேவையாக செயற்படுத்தப்படவுள்ள இந்த அமர ஊர்தி சேவையை, இப்பிரதேசத்திலுள்ள மக்கள் மாத்திரமின்றி இலங்கையின் எப்பாகத்தில் உள்ளவர்களுகளும் பயன்படுத்தலாம். மேலும், இச்சேவையை 0652250075 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம் என குறிப்பிட்டார்.