முல்லைத்தீவில் வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 3,200 கிலோகிராமுக்கும் அதிகமான மீன்கள், கூட்டு நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கிழக்கு கடற்படை கட்டளையகத்தின் SLNS கோட்டாபய முகாம் கடற்படையினரும், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து செப்டெம்பர் 7ஆம் திகதி இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.புதுமாத்தளன் கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான மீன் சேகரிப்பு நிலையமொன்றைச் சோதனையிட்டபோது, வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட மீன்களும் சந்தேகநபரான பெண்ணும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் முல்லைத்தீவு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.




.jpg)






.jpg)

.webp)