
கனேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சந்தேக நபராகக் குறிப்பிடப்படும் இஷாரா செவ்வந்தி, நாட்டிலிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்குப் படகு வழங்கி உதவியதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார், இலுப்பைக்கடவை பொலிஸ் விசேட பணியக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியைச் சேர்ந்த 'பலசி' என அழைக்கப்படும் ஜேசுதாசன் செல்வசேத் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இஷாரா செவ்வந்தி சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்கு இவரே படகு வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.








.jpg)

.webp)
.jpg)
.jpeg)