இன்று முதல் 3 நாட்களுக்கு ஒரு மணிநேர மின்வெட்டு – 4 வலயங்களுக்கு அனுமதி!



நாட்டின் நான்கு வலயங்களில் இன்று (19) முதல் மூன்று நாட்களுக்கு ஒரு மணிநேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) மற்றும் எரிசக்தி அமைச்சிடம் தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் (National System Operator – NSO) விடுத்த கோரிக்கைக்கு ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.

தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர்களின் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்த தகவலின்படி, முன்மொழியப்பட்டுள்ள மின்வெட்டு மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அடுத்த மூன்று நாட்களுக்கு இந்தக் காலப்பகுதியில் நான்கு வலயங்களிலும் தலா ஒரு மணிநேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துவதே இந்தக் கோரிக்கையின் நோக்கமாகும்.

மின்வெட்டினால் பாதிக்கப்படும் வலயங்கள் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.