மீன்பிடிப் படகு வாங்க 25,000 யூரோ கொடுத்த ஜேர்மன் காதலி மீது இலங்கை காதலன் தாக்குதல்!



மீன்பிடிப் படகு வாங்குவதற்காக 25,000 யூரோ வழங்கிய 40 வயதான ஜேர்மன் பெண்ணை, அவரது 29 வயதான இலங்கை காதலன் தாக்கியதாக ரத்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கைக்கு முன்னர் வருகை தந்தபோது பூஸ்ஸ, பிட்டிவெல்ல பகுதியைச் சேர்ந்த இளைஞருடன் குறித்த பெண் காதல் உறவை ஏற்படுத்தியுள்ளார்.

பின்னர் இலங்கைக்கு மீண்டும் வந்த அவர், பூஸ்ஸ பகுதியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்தபோது, காதலன் மேலதிக பணம் கோரி மரக்கம்பால் தாக்கியதுடன், அவரது கையடக்கத் தொலைபேசியையும் சேதப்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தான் வழங்கிய 25,000 யூரோ பணத்தை மீட்டுத் தருமாறு பெண் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சந்தேகநபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ரத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.