இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு திருகோணமலையில் பரவலாக பல இடங்களிலும் நடைபெற்று வருகின்றது. கடந்த புதன்கிழமை இராணுவத்தினரைத் தொடர்ந்து வெள்ளி்க்கிழமை பொலிசார் இப்தாரை நடத்தினார்கள். மறுபக்கம் பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமேயைத் தொடரந்து கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதமாலெப்பை. மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம், முன்னாள்பாராளு மன்ற ஊறப்பினர் திடீர் தௌபீக் என இத நீண்ட செல்கின்றது.
திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் நேற்று 2ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற இப்பதார் நிகழ்வில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் புஜித ஜெயசுந்தர கலந்து கொண்டு சிறப்பித்தார்.
நோன்பு திறக்கும் நிகழ்வில் மத ஒற்றுமையை பிரதிபலிப்பதற்காக பௌத்த. கிறிஸ்தவ மதகுருமார்களும் கலந்து கொண்டுவருகின்றனர். இன உறவை வலுப்படுத்த சகல இனத்தவர்களும் இந் நிகழ்வுக்கு வேறுபாடுகள் இன்றி அழைக்கப்படுகின்றனர்.
இன மதங்களுக்கு இடையே புரிந்துணர்வுடன் மேற்கொள்ளப்படும் இவ்வாறான நிகழ்வுகள் எதிர்காலத்தில் மனிதாபிமானத்தை வலுப்புடத்தும் என எண்ணுவோமாக.












