காரைதீவு மாளிகைக்காடு மேற்கு மஸ்ஜிது நூறா பின்து சாலிஹ் அத்-தாயில் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வு நேற்று 03 திகதி சனிக்கிழமை மாலை பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது.
இன் நிகழ்வு பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் எ.எல்.மீராசாஹிபு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதித் தலைவர் மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா முன்னாள் கல்விப்பணிப்பாளர் சட்டத்தரணி எம்.சி.ஆதம்பாவா பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் உள்ளிட்ட பிரமுகர்கள் அதிதிகயாக கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் பல்சமய பிரதிநிதிகள் பெருந்தொகையான முஸ்லிம் பிரமுகர்கள் உயரதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
சுமார் 6 கோடி ருபா பெறுமதியான காணியை பள்ளிவாசலுக்கு அன்பளிப்புச் செய்த ஆதம்பாவா அவர்களை நினைவு கூர்ந்து முன்னாள் சாஹிறா அதிபர் எம்.சி.ஆதம்பாவா சொற்பொழிவாற்றினார்.
சுமார் 6 கோடி ருபா பெறுமதியான காணியை பள்ளிவாசலுக்கு அன்பளிப்புச் செய்த ஆதம்பாவா அவர்களை நினைவு கூர்ந்து முன்னாள் சாஹிறா அதிபர் எம்.சி.ஆதம்பாவா சொற்பொழிவாற்றினார்.
பள்ளிவாசல்கட்டுவதற்கும் உதவிய அனைவருக்கும் பொன்னாடை போர்த்தும் நினைவுச்சின்னம் வழங்கியும் கௌரவம் வழங்கப்பட்டது.
(வி.ரி.சகாதேவராஜா)