சுனாமி தாக்கத்தின் 9ம் வருட நினைவு நிகழ்வு திருகோணமலை கிண்ணியா பிரதேசத்திலும் அனுஸ்டிக்கப்பட்டது.

(கதிரவன்)
கிண்ணியா சிறுவர் புங்காவில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவு தூபி முன்றலில் நிகழ்வு நடைபெற்றது. கிண்ணியா நகர சபையும் திருகோமலை பிரசைகள்குழுவும் இநை்து இதனை ஏற்பாடு செய்திருந்தன. பிரதேச செயலாளர் எஸ்.கிருஷேந்திரன் தலைமையில்  நிகழ்வுகள்நடைபெற்றது.  
ஆலங்குணி விநாயகர் ஆலயத்தின் பிரதம குரு பிரபாகரசர்மா, சீனக்குடா விாராதிபதி தெய்யோவிட்ட பியதிஸ் தெரோ, கிண்ணியா ஜம்மியத்து் உலமா தலைவர் எஸ்.ஹிதாயத்துள்ளா,கிண்ணியாநகர சபை தலைவர் வைத்தியகலாநிதி ஹில்மி உட்பட பலர் கலந்து கொண்டனர். 
சுனாமஜ தா்கத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்ப உறவினர்க்ள் பெருமளவில் இதில் கலந்து கொண்டனர்.

சுனாமி நினைவு நிகழ்வான மதகுருக்களாலும் பிரமுர்களாலும் மரக்கன்றுகள்  நட்டு வைக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களுக்கு கொப்பிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

இதே வேளை திருகோணமலை நகர சபையினரால் திருகோணமலை கடற்கரையிலும் சுனாமி நினை அஞ்சலி் நடத்தப்பட்டது.