செங்கலடி பிரதேச செயலாளரின் இடமாற்றம் இரத்துச்செய்யப்படுமென ஜனாதிபதியின் ஆலோசகர் உறுதி!

(தீரன்)
செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளரின் இடமாற்றம் இன்னும் சில தினங்களில் இரத்துச் செய்யப்படும்  என கிழக்கு மாகாணத்தின் முன்னால் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன்; உறுதியளித்துள்ளார்.


இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்

ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் பிரதேச செயலாளர் திரு. உ.உதயசிறிதர் அவர்களை இன்றைய(14.07.2014) தினம் உடன் அமுலுக்கு வரும் வகையில் மட்டக்களப்பு கச்சேரிக்கு இடமாற்றம் செய்வதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட இடமாற்றம் இன்னும் சில நாட்களில் இரத்துச்செய்யப்பட்டு தொடர்ந்தும் திரு.உதயசிறிதர் அவர்கள் இதே பிரதேச செயலகத்தில் கடமையாற்றுவார் என உறுதியளித்துள்ளார்.

இது குறித்து பொருளாதார அமைச்சர் பசில்ராஜபக்ச மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜேன் செணவிரெட்ன அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் அவர்கள் மேற்படி எமது பிரதேச செயலாளர் திரு. உ.உதயசிறிதர் அவர்களின் இடமாற்றத்தை இரத்துசெய்துவிட்டு புதிதாக பதவியேற்ற திரு.தயாபரன் அவர்களை கச்சேரிக்கு இடமாற்றம் செய்து தருவதாக தன்னிடம் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்த கடிதம் அனேகமாக நாளையதினம் அரசாங்க அதிபர் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் அனுப்பிவைக்கப்படுமெனவும் அவர் பொதுமக்களுக்கு உறுதிப்பட தெரிவித்தார்.