(சிவம்)
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ சங்கத்தின் வருடாந்த விஞ்ஞானரீதியான ஒன்றுகூடல் நிகழ்வு -2014 வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
மட்டக்களப்பு மருத்தவ சங்கத்தின் தலைவர் ஏ. பார்த்தீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதிகள் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர்.
'புற்றுநோயைக் குணமாக்கும் சகல அம்சங்களும் உள்ளடக்கிய மருத்துவம்' எனும் தொனிப்பொருளில் கூட்டம் ஆரம்பமானது.
மட்டக்களப்பு பரத கலாலயா மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது.
மஹரகம தேசிய புற்றுநோய் மருத்துவ நிலையத்தின் சிரேஷ்ட சத்திரசிகிட்சை நிபுணர் இந்திராணி அமரசிங்க, சிரேஷ்ட வைத்திய நிபுணர் ஜெயந்த பாலவர்த்தன மற்றும் முன்நாள் பிரதி சபாநாயகரும் மட்டக்களப்பு மெதடிஸ் மத்திய கல்லூரியின் முன்நாள் அதிபருமான பிரின்ஸ் காசிநாதர் ஆகியோர் மருத்துவ சங்கத்தின் நிர்வாகத்தினருக்கான நினைவுச் சின்னங்களை வழங்கிக் கௌரவித்தனர்.
இந்நிகழ்வுகள் தொடர்ச்சியாக இன்றும் (09) மற்றும் நாளையும் (10) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.