நான்கு ஆண்டுகளுக்கு முன்பே பெண்ணாக மாறிய அரை நிர்வாணமாக நடமாடிய தாய்லாந்து சுற்றுலா பயணி !


அருகம் குடாவில் ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் மேலாடையின்றி அரை நிர்வாணமாக நடமாடி சர்ச்சையை ஏற்படுத்திய தாய்லாந்து சுற்றுலா பயணி , நான்கு ஆண்டுகளுக்கு முன்பே பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து ஆணிலிருந்து பெண்ணாக மாறியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

சுற்றுலா பயணி ஆணாக பிறந்து முழு பெண்ணாக மாறுவதற்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.

சுற்றுலாப் பயணி மேலாடையின்றி இருக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்தபோது இந்த சம்பவம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

கடந்த 14 ஆம் திகதி சுற்றுலாப் பயணி அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததற்காகவும் தெரிவித்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்நிலையில், அவருக்கு ஐந்து ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வாரங்களும் ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அதன்படி, அவருக்கு அநாகரீகமாக நடந்து கொண்டமைக்கு இரண்டு வார சிறைத்தண்டனையும், பொது மக்களுக்கு இடையூறு விளைவித்தமைக்காக ஒரு மாத சிறைத்தண்டனையும் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

வழக்கு விசாரணைகளின் போது அவரது பாலினத்தை பெண் என நீதிமன்றம் ஏற்றுக்கொண்டாலும், அவரின் கடவுச்சீட்டு புகைப்படம் ஒன்லைனில் பகிரப்பட்டது. அதில் 'M' (ஆண்) எனவும், பாலினம் மற்றும் 'Mr.' எனவும் குறிப்பிடப்பட்டிருந்தமை திருப்பத்தை ஏற்படுத்தியது.

இலங்கையில், குறிப்பாக பொது ஒழுக்கச் சட்டங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில், பாலினம் எவ்வாறு சட்டப்பூர்வமாக விளக்கப்படுகிறது என்பது குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டது.

அவரது அங்க அடையாளத்திற்கும் உத்தியோகபூர்வ ஆவணங்களுக்கும் இடையில் வேறுபாடு காணப்படுவது, பாலின பன்முகத்தன்மையை முழுமையாகப் பூர்த்தி செய்யாத சட்ட அமைப்புகளில் திருநர்களின் உரிமைகள் மற்றும் அங்கீகாரம் குறித்து பல கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணி அமெரிக்க நாட்டவர் ஒருவருடன் இலங்கைக்கு வந்து 11 முதல் 20 ஆம் திகதி வரை அருகம் குடாவில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் தங்குமிடத்தை முன்பதிவு செய்துள்ளமை தெரியவந்ததுள்ளது.