அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி மற்றும் முச்சக்கரவண்டி சாரதி ஆகியோர் பலத்த காயங்களுக்குள்ளாகி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் இந்த வாகன விபத்து இன்று (16) காலை 9.30 மணியளவில் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலை முன்பாக இடம்பெற்றது.
அக்கரைப்பற்றிலிருந்து கல்முனை நோக்கி வந்த முச்சக்கர வண்டியுடன் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதால் இந்த வாகன விபத்து ஏற்பட்டது.
இதில் பலத்த காயங்களுக்குள்ளான சாரதிகள் இரண்டு பேரும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளது.