(Battinews London )
லண்டனில் வசிக்கும் மட்டக்களப்பை சேர்ந்த ஷனா மகேந்திரன் தனது அயராத முயற்சியால் No Mad Team எனும் ஊடக சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார் .
மட்டக்களப்பு புனித செசிலியா பாடசாலையின் மாணவியான இவர் , இலங்கையில் நடைபெற்ற தேசிய மட்ட ஆங்கில தின நாடக போட்டியில் தொடர்ச்சியாக இரண்டு தடவை சிறந்த நடிகைக்கான விருது பெற்று மட்டக்களப்பிற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்தார் . இதன் மூலம் மண் திரைப்படத்தில் கதாநாயகியாக இந்திய சிரேஸ்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பணியாற்றி தனது நடிப்பு திறமையை உலகத்திற்கு வெளிக்கொண்டுவந்தார் . சிறந்த நடிகைக்கான விருதை கனடாவில் இடம்பெற்ற தமிழ் திரைப்பட விழாவில் பெற்றுகொண்டார் .
இலங்கை தொலைக்காட்சியிலும் நிகழ்சிகளை தொகுத்து வழங்கிய இவர் பின்பு மேற்படிப்பிற்காக லண்டன் சென்று அங்கு கணக்கியல் துறையில் தனது பட்டப்படிப்பை முதற்தர சித்தியுடன் பூர்த்தி செய்து ஒரு வருடம் முகாமைத்து கணக்காளர் (management accountant) வேலை செய்தார் . பின்பு தனது சிறுவயது கனவான சினிமா ஊடக துறை கம்பனியை ஆரம்பித்து தனது முதற் படைப்பான SMS (Shana Mahendran Show ) ஆரம்பித்துள்ளார் .
பல்வேறுபட்ட வெளிநாட்டில் வாழும் கலையுல நட்சத்திரங்களின் திறமைகளை தேடி அவர்களிடம் ஒளிந்திருக்கும் இதுவரை நம்மில் பலர் அறியாத திறமைகளை வெளிக்கொண்டும் புதியதொரு நிகழ்ச்சியே SMS (Shana Mahendran Show ) அதன் ஆரம்ப காட்சிகளினை ( promo ) YouTube இணையத்தளத்தில் வெளியிட்டிருக்கின்றார். முழுமையான காட்சிகள் மிகவிரைவில் வெளியாகும் என்பதையும் SmS ஷனா அறிவித்திருக்கிறார்.
SMS முன்னோட்ட காணோளியை பார்த்து விஜய் டி.வி திவ்யதர்ஷினி , ம.கா.பா. ஆனந்த் , பா.ரஞ்சித் தங்களது வாழ்த்துக்களை ட்விட்டர் மற்றும் பேஸ்புக் மூலம் தெரிவித்திருந்தனர் .
லண்டனில் வசிக்கும் மட்டக்களப்பை சேர்ந்த ஷனா மகேந்திரன் தனது அயராத முயற்சியால் No Mad Team எனும் ஊடக சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார் .
மட்டக்களப்பு புனித செசிலியா பாடசாலையின் மாணவியான இவர் , இலங்கையில் நடைபெற்ற தேசிய மட்ட ஆங்கில தின நாடக போட்டியில் தொடர்ச்சியாக இரண்டு தடவை சிறந்த நடிகைக்கான விருது பெற்று மட்டக்களப்பிற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்தார் . இதன் மூலம் மண் திரைப்படத்தில் கதாநாயகியாக இந்திய சிரேஸ்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பணியாற்றி தனது நடிப்பு திறமையை உலகத்திற்கு வெளிக்கொண்டுவந்தார் . சிறந்த நடிகைக்கான விருதை கனடாவில் இடம்பெற்ற தமிழ் திரைப்பட விழாவில் பெற்றுகொண்டார் .

பல்வேறுபட்ட வெளிநாட்டில் வாழும் கலையுல நட்சத்திரங்களின் திறமைகளை தேடி அவர்களிடம் ஒளிந்திருக்கும் இதுவரை நம்மில் பலர் அறியாத திறமைகளை வெளிக்கொண்டும் புதியதொரு நிகழ்ச்சியே SMS (Shana Mahendran Show ) அதன் ஆரம்ப காட்சிகளினை ( promo ) YouTube இணையத்தளத்தில் வெளியிட்டிருக்கின்றார். முழுமையான காட்சிகள் மிகவிரைவில் வெளியாகும் என்பதையும் SmS ஷனா அறிவித்திருக்கிறார்.
SMS முன்னோட்ட காணோளியை பார்த்து விஜய் டி.வி திவ்யதர்ஷினி , ம.கா.பா. ஆனந்த் , பா.ரஞ்சித் தங்களது வாழ்த்துக்களை ட்விட்டர் மற்றும் பேஸ்புக் மூலம் தெரிவித்திருந்தனர் .
Watch "SMS_Talk Show Highlights on Xmas_Official Video" london talent,congrts shana: do realy well :HNY london : http://t.co/mWmG7EsMPs
— DD Neelakandan (@DhivyaDharshini) December 29, 2014
Watch "SMS_Talk Show Highlights on Xmas_Official Video" on YouTube - SMS_Talk Show Highlights on Xmas_Official http://t.co/4529SqdC3d
— ma ka pa anandh (@makapa_anand) December 26, 2014