மட்டக்களப்பு கல்குடாபொலிஸ் பிரிவின் பாசிக்குடா பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் வெள்ளிக்கிழமைஇரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கல்குடா பிரதேசத்தில் இருந்து துவிச்சக்கரவண்டியில் பேத்தாழையில் உள்ள தங்களது வீடு நோக்கி சென்று கொண்டிருந்தவர்களை குறித்த மேற்படி பிரதேசத்தில் இருந்து அதே வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது சிவன்கோயில் வீதி பேத்தாழையைச் சேர்ந்த வே.பரசுராமன் வயது (55) என்பவர் உயிரிழந்துள்ளதுடன் அதே இடத்தினைச் சேர்ந்த க.கமலநாதன் வயது (54) படு காயமுற்று வாழைச்சேனை ஆதாரா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைப்பதற்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.