கரணம் தப்பினால் மரணம்! தோணி மூலம் ஆற்றைக் கடக்கும் மக்களின் திகில் பயணம்.
மட்டக்களப்பு கோரளைப்பற்று பிரதேச செயலகம் மற்றும் கோரளைப்பற்று தெற்கு பிரதெச செயலகத்திற்கு இடைப்பட்ட கிண்ணையடி – முருக்கன்தீவு கிராமத்தை இணைக்கும் கிண்ணையடி முருக்கன்தீவு துரையடியில் பாலம் அமைக்காமையினால் மக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
கிண்ணையடிக்கும் முருக்கன்தீவு கிரமமத்திற்கும் இடையிலான ஆற்றின் இடைவெளி 200 M தூரம் காணப்படுகின்றது. இதனை கடக்க முடியாது போனால் மக்கள் 5 தொடக்கம் 6 கிலோ மீற்றர் தூரம் சுற்றியே தமது பயணத்தை மேற்கொள்கொள்ள வேண்டும்.
ஆற்றை கடப்பது மிகவும் ஆபத்தான பயணமாகவுள்ளதாகவும் இரவு வேளைகளில் நோய்வாய்ப்படும் நோயாளிகளை வைத்தியசலைக்கு கொண்டுசெல்வதில் மிகவும் பாரிய சவாலை எதிர்நோக்குவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இவேளை பாடசாலை மாணவர்கள் முருக்கன்தீவில் தமது ஆரம்பக்கல்வியை கற்று மேற் படிப்பிற்காக ஆற்றை கடந்துசெல்லும் பிரச்சியையினால் பல மாணவர்கள் பாடசாலைக் கல்வியில் இருந்து இடை விலகுவதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
எத்தனையோ அரசியல்வாதிகள் வந்து இத் துரைமுகத்தை பார்வையிட்டு இத்துரைமுகத்திற்கான பாலத்தை அமைப்பதற்கு நடவடிககை விரைவல் எடுக்கப்படும் எனக்கூறிச்செல்கின்றார்கள் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையைன மக்கள் தெரிவிக்கின்றனர்.
தாம் ஆபத்தின்றி எப்போது பயணிப்பது என மக்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்து நிற்கின்றனர்.