
(எம்.எஸ்.எம்.சறூக்)
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் அலுவலகம் வருடாந்தம் ஏற்பாடு செய்யும் 'இப்தார்' நோன்பு துறக்கும் வைபவம் 2018.06.04 ஆம் திகதி திங்கட்கிழமை மேற்படி அலுவலகத்தில் பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் டி.ஏ. பிரகாஷ; அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்த சமூக ஓருங்கிணைப்பு இப்தார் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், பாதுகாப்பு உயர் அதிகாரிகள், ஏனைய அரச திணைக்களங்களின் தலைவர்கள், மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிழக்கு பிராந்திய பிரதி பொது முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.














