பெண் கல்வியும் சமுதாய முன்னேற்றமும்

இன்றைய நவீன உலகில் கல்வியே மாற்றத்திற்கான அடித்தளம் எனக் கூறுவது முற்றிலும் உண்மையே.கல்வியறிவே மனிதனை வளர்ச்சியடையச் செய்வதாகவுள்ளது.தொழிலினையே மையமாகக் கொண்டு வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் சமுதாயமானது பெண்களினது நலனையோ அவர்களின் திறமைகளையோ வெளிக்கொண்டுவருவதில் ஆர்வம் காட்டுவதில்லை என்றே கூற வேண்டும்.'பெண்கள் நாட்டின் கண்கள்' என்பதனை வலியுறுத்தும் சமுதாயம் பெண்களுக்கான முழுமையான சுதந்திரத்தை வழங்க வேண்டும்.அத்தோடு பெண்கல்விக்கு வாய்ப்பளித்தல் வேண்டும்.ஒரு டிபண் அடிப்படையில் கற்பதால் அச் சமுதாயமே சிறப்படையும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.

உலக நாடுகளில் கல்வி என்பது மனிதர்களின் மூச்சாகக் காணப்படுகின்றது.கல்விக்காக தமது வாழ்நாள் முழுவதையுமே செலவு செய்வதோடு தமது அறிவினையும் விருத்தி செய்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.இருப்பினுமஇன்று பெண் கல்வியானது ஒரு காத்திரமான அறிவுத்தளத்தில் பேசப்படுகின்றது. ; ;அது சமுதாயம் வரை உதவுகிறது;.                                                                                   
                                                    'ஓரு ஆண் கற்பதால் அவன் மட்டுமே கற்கிறான் மாறாக ஒரு பெண் கற்கும் போது மொத்த சமூகமே கற்கிறது'எனலாம்.குடும்பத்தையே சுமக்கும் பெண்களின் கல்வி முன்னேற்றம் பல விதத்திலும் வளர்ச்சியடைந்திருக்கிறது.வீட்டிலேயே அடிமைப்பட்டுக் கிடந்த பெண்களின் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் நோக்கிலே கல்வியறிவால்வெற்றி பெற்ற பெண்ணின் விண்வெளிப் பயணம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
                           
                            பெண் என்பவள் குடும்பத்தைக் கவனித்தல்,பிள்ளைகளைப் பரபமரித்தல்,வீட்டை நிர்வகித்தல் போன்ற பல்வேறு பணிகளை கஷ்டங்களினால் பெற்ற அனுபவத்தின் மூலம் குடும்பத்தினைச் சிறப்பானதாகக் கொண்டு செல்கின்றனர்.எப்போதும் பெண்களுக்கு முறையான கல்வி என்பது ஆண்களுக்குக் கிடைப்பது போன்று முழுமையாகக் காணப்படுவதில்லை. சமூக,பொருளாதார,பண்பாட்டுக் காரணிகளால் அவர்களின் பாடசாலைக்கல்வி பாதியிலேயே நின்றுவிடுகின்ற நிலையினைக் காணலாம்.உதாரணமாக திமணம்,பெண்கள் மீதான குடும்பத்தினுடைய திணிப்புக்கள்,பிழையான கலாசாரக் கொள்கைகள் என்பன அவர்களின் உயர் கல்வியைப் பாதிக்கின்றன என்றே கூறலாம்.
           
           மேலும் இலங்கையில் பெண்கல்வியானது ஏனைய தென்னாசிய நாடுகளை விட முன்னேறியுள்ளது என்பது சுகாதாரத்திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.உதாரணமாக குழந்தை ஆரோக்கியமாக வளர பெண்களின் படிப்பும் அதனால் பெறுகின்ற பலவிதமான அறிவும் இன்றியமையாத ஒன்றாகும்.ஒவ்வொரு பெண்ணும் தமது குழந்தையின் எதிர்காலத்தை வளமானதாக அமைத்துக்கொள்வதற்கு பெண்கல்வியானது இலங்கையிவல் தாய்சேய் கல்வியாகத் தற்காலத்தல் வளர்ச்சியுற்றுள்ளமையைக் காணலாம்.
                          
                             பெண்களே சமுதாயத்தின் கலாசார அடையாளங்கள்.பெண்கள் தங்களுக்கும் சமுதாயத்திற்கும் நன்மையளிக்கக் கூடிய வழிகளைத் தாம் பெறுகின்ற கல்வி மூலம் பெறுகிறார்கள்.அந்தவகையில்' செல்வங்களிற் சிறந்த கல்விச்செல்வம்'என்பதனை அறிந்த மூதாதையர்கள் தங்களால் இயன்றவரை கல்விச் செல்வத்தைப் பெண்களுக்கு கொடுப்பதற்காகப் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளதோடு தற்காலம் வரையில் அதில் முன்னேற்றத்தினையும் வளர்ச்சியினையும் கண்டுள்ளதோடு பெண்களுக்கான தனித்துவத்தினையு; பெற்றுக் கொடுத்துள்ளமையைக் காணலாம்.
                          
     'பாலிகா'என்ற பெயரில் இன்றும் எமது நாட்டிலே பல பாடசாலைகள் வெற்றிகரமாக இயங்குகின்றன.பெண்கள் கல்லூரிகள் முக்கியமானவை கலவன் பாடசாலைகளை விட ஆண்,பெண்களுக்கான தனியான பாடசாலைகளில் பெறுபேறுகள் சிறப்பாக கிடைப்பதாக புள்ளிவிபரங்களுண்டு.பெண்களின் கல்வியினால் அவர்களின் குடும்பம் மட்டுமல்ல சமுதாயமும் சிறப்பாக பயன்படுகின்றுத என்பதில் ஐயமில்லை. 
                             ஆண்களுக்கு குருகுலக்கல்வி காணப்பட்ட்தைப் போன்று பெண்களுக்கென தனியாகக் கல்வி நிலையங்கள் எமது நாட்டில் அக்காலங்களில் காணப்பட்டதாக ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன.மேலும் அக்காலகட்டத்தில் மனுதர்ம சாஸ்திரம்,குடும்ப பெண்கள் எப்படி வாழ வேண்டும் என்ற எவிதிமுறைகளை முன்னெடுத்தது.வயதுக்கு வந்த பெண்கள் ஆண் துணையற்று வெளியே போகக் கூடாது என்பதனை வலியுறுத்துகிறது.பெண்கள் சிறுவயதில் அப்பாவின் பட்டுப்பாட்டினுள்ளும் கணவனது கட்டுப்பாட்டினுள் மாத்திரமே இருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தியமையால் பெண்களுக்கான கல்வி அனுமதிக்கப்படவில்லை என்றே கூறலாம்.இருப்பினும் தற்காலத்தில் இந்நிலை முற்றாக நீககப்பட்டுள்ளமையினைக் காணலாம.;; 
                                                                 
                            மேலும் ஆதி காலத்தில் மனுதர்ம சாஸ்திரம் பெண்களின் கட்டுப்பாட்டினை வலியுறுத்தினாலும் கீழைத்தேய பல பெண்கள் கல்வியறிவு பெற்றதற்கான பல சான்றுகள் உள்ளன.சங்ககாலத்தல்  பல படித்த பெண்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பதற்கு ஒளவையார் போன்ற சான்றாகின்றனர்.பெண்கள் பல நாடுகளிலும் பல சமய பணிகளிலும் ஈடுபட்டிருக்கின்றார் என்பதற்கு இந்திய காரைக்காலம்மையார்,ஆண்டாள் போன்றோர் உதாரணமாகின்றனர்.இஸலாம் பரவுவதற்கு நபிகள் நாயகத்தின் துiணைவியார் கதீஜா அம்மையார் பெரும்பணியாற்றிருக்கின்றார் என்றும் கிறிஸ்தவ சமயத்தின் ஆரம்பத்தில் மேரிமக்டரின் பணியும் குறிப்பிடத்தக்கதென ஆய்வுகள் பெண்கல்வியின் பாரம்பரியம் பற்றிக் குறிப்பிடுகின்றது.
                                                                   
 ஒரு சமுதாயம் எப்படி முன்னெற்றமடைகின்றது என்பதனை அந்நாட்டில் பெண்களின் கல்வியும் அக் கல்வி மூலம் பெண்கள் சமூகத்திற்கு செய்கின்ற பணிகளையும் வைத்து தெளிவடையலாம்.அந்தவகையில் கடந்த 200 வருடங்களாகப் பெண்களின் உயர்கல்வியின் நிலை படிப்படியாக வளல்ச்சியடைந்தே வந்துள்ளது.இன்று பல நாடுகளிலும் பெண்கள் ஆண்களை விட உயர்ந்த மட்டத்தில் பரீட்சைகளில் சித்தியடைவதைக் காணக்கூடியதாகவுள்ளது.1981,1982ம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வியமைப்பால் நடத்தப்பட்ட ஆய்வின் படி தென்னாசியாவில் உளர்கல்வியை நாடும் பெண்களின் எண்ணிக்கையில் இலங்கை முதலிடத்திலுள்ளது.அதிலும் வடபகுதிப் பெண்கள் பலர் இலங்கையின் தென்பகுதிப் பெண்களை விட கூடிய கல்வித்தகைமையில் இருந்தார்கள் என இவ்வறிக்கை குறிப்பிட்டள்ளது.
            
           அண்மைக்காலத்தில் எடுத்த கணிப்பின் படி இலங்கையின் ஒட்டுமொத்த சனத்தொகை 21, 283 913 என்றும் அதில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட கூடுதலாக இருக்கிறது.அதில் பெண்களின் சனத்தொகை 10,864 073.ஆண்களின் சனத்தொகை 10,419 840 ஆகும்.இலங்கையில் பெண்களின் கல்வி தென்னாசிய நாடுகளை விட மிகவும் உயர்வாக உள்ளது.கடந்த காலங்களில் இலங்கை 5.4வீதம் கல்விக்காக செலவிடப்பட்;டது என்பது குறிப்பிடத்தக்கது.
             
            கல்வியில் பெண்கள் பல்Nறு சவால்களை எதிர்நோக்கியே வெற்றியடைய வேண்டிய சூழ்நிலையகை; காணலாம்.அந்தவகையில் பெண்களின் கல்வியானது கட்டாயமானதொன்று என்பதோடு பெண்ணே குடும்பத்தின் குலவிளக்கு என்பதனையும் தாண்டி சமூகத்தின் வெற்றியின் சின்னமாகவும் கொள்ளப்படுகின்றனர்.பெண்ணினம் தலைத்தோங்கும் போது சமூகம் மட்டுமன்று நாடும் முன்னேற்றமடைகின்றது.அந்தகையிலே பெண்களுக்கான சவால்களாக பின்வருவனவற்றை எடுத்துக்காட்டலாம்.  
             இலங்கை சுதந்திரமடைந்த பின் திரு.கன்னங்கரா அவர்களால் கொண்டுவரப்பட்ட கல்வித்திட்டத்தினால் 1931 ல் இலங்கையிலுள்ள எல்லா மக்களுக்கும் கல்வி கொடுக்கப்பட வேண்டும் என்ற சட்டம் அமுலுக்கு வந்தது. இன்று இலங்கையில் 10144 பாடசாலைகளால் 4030000 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். இலங்கையின் ஒட்டுமொத்த மாணவர்களின் கல்வியை நோக்கின் சாதாரணதர வயதுக்கு மேற்பட்ட மாணவர்களில் 92மூ உயர்கல்வியை நாடுகின்றனர். ஆண்கள் பெண்கள் என பிரித்துப் பார்த்தால் மேற்படி படிக்கும் மொத்த ஆண்கள் 95.8மூ என்றும், பெண்களின் தொகை 93மூ எனவும் இலங்கையின் கல்வி அமைச்சு  அறிக்கை உள்ளது. இந்நிலை இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் சமமாக இல்லை. குடந்த 30 வருட போரின் காரணத்தினாலும், வேறு காரணங்களாலும் இலங்கையின் சில பகுதிகளில் கல்வி நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் உயர்கல்வி பெறும் பெண்கள் 81.3மூ அம்பாரை 87.2மூ நுவரெலியாவில் 80.1மூ என தேசிய பெண் கல்வி மட்டத்தை விட குறைந்தளவே பதிவாகிறது எனலாம்.
            2010 ம் ஆண்டு இலங்கைப் பல்கலைக் கழகங்களுக்குப் போனவர்களில் 58மூ பெண்களாகும். இதற்கு காரணம் ஆண்கள் போரிற்குப் பயந்து வெளிநாடுகளுக்கு சென்றமையினால் போதிய பாதுகாப்பு பெண்களுக்கு கிடைக்கவில்லை என்றே கூறலாம்.இவற்றையெல்லாம் தாண்டி பெண்கள் உயர் கல்வியினை கற்றாலும் 78.80மூ கலைத்துறையிலும், வர்த்தகத்திலும் ஆர்வம் காட்டியமையினால் பெண்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் உருவாணதோடு கல்வியும் பயனற்றதாக காணப்பட்டமையால் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலேயே கல்வி கற்றமை குறிப்பிடத்தக்கது.
காலத்திற்கு காலம் பெண்களின் கல்வியானது பல திருப்பு முனைகளுடனேயே சமூகத்தினதும் கலாச்சாரத்தினதும் வளர்ச்சிக்கு உதவியிருக்கின்றனர். பல்வேறு துன்பங்களைத் தாண்டி குடும்பத்தினை வெற்றிப்பாதைக்குக் கொண்டு சென்ற பெருமை பெண்களையே சாரும் எனலாம். ஆனால் இன்றும் பல சவால்களை மாணவிகள் எதிர்நோக்ககின்றனர். அத் தடைகள் அனைத்தையும் தாண்டி, தன்னையும் தனது சமூகத்தையும் மேன்நிலைக்கு கொண்டுவருபவர்கள் பெண்களாவர். இன்றுள்ள பல்கலைக்கழக மாணவிகளும் தங்களின் வளர்ச்சிக்கம் சமுகத்தின் வளர்ச்சிக்கும் உதவி செய்ய முன்வரல் வேண்டு;ம் என்பதே இக்கட்டுரையின் எதிர்பார்பாகும்.                                             
 பெண்களின் மனநிலைக்கும் அவர்களின் திறமைகளுக்கும் முதன்மையளிக்க வேண்டியது ஒவ்வொரு குடும்பத்தினதும் கடமையாகும்.பெண்மை போற்றும் போது சமுகமும் போற்றப்படும் என்பது எனது கருத்தாகும்.ஒரு பிள்ளையை கருத்தரித்து இவ்வுலகில் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் பெண்மைக்கு கல்வியறிவே அவசியம்.பெண்கல்வியை முழுமையாக வழங்கி சமுதாயத்தினையுமு; மேலோங்க செய்யலாம்.தேவையில்லாத காரணத்திற்காக பெண்களின் கல்வியை இடைநிறுத்தும் நிலை பொதுவாகவே எமக்குள் மாறுதல் வேண்டும்.இதன் மூலம் கல்வியானது முழுமையாக வளர்ச்சியடையும் என்பதில் ஐயமில்லை.


                                                   வசந்தகுமார் நிலுக்ஸனா
                                                   2ம் வருட சிறப்புக் கற்கைநெறி
                                                   கல்வி,பிள்ளை நலத்துறை


                                                   கிழக்குப் பல்கலைக்கழகம்.