சம்மாந்துறை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட கிராமமான மல்லிகைதீவு பிரதேசத்துக்கு இளைஞர் சேனை அமைப்பினர் கடந்த வாரம் கள ஆய்வுக்காக விஜயம் செய்திருந்தனர்.
அண்மைக்காலமாக இவ்வூர் மக்கள் சிறுநீரக நோய்க்கு உள்ளாகி வருவது தொடர்பில் கள ஆய்வின் படி அருகிலுள்ள வயல் நிலங்களுக்கு பயன்படுத்தும் இரசாயன பதார்த்தங்கள் குடிநீரில் கலப்பதினால் இவ்வூர் மக்கள் சிறுநீரக நோய்க்கு காரணமாக அமைந்து உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விடயம் சம்மந்தமாக இளைஞர் சேனை விரைவாக நடவடிக்கைகள் எடுத்ததின் பலனாக தற்காலிக தீர்வாக பருகுவதற்கு உகந்த நீரை வேறு பிரதேசத்தில் இருந்து வழங்க நடவடிக்கைகள் எடுத்திருந்தனர். இவ் அமைப்பினரினால் 9 நீர் கொள்கலன்கள் அந்த பிரதேசத்தில் நிறுவப்பட்டு, அருந்த கூடிய சுத்திகரிக்கப்பட்டட நீர் வழங்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் பல அரசியல்வாதிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றும், கவனிப்பு இன்றி இருந்த இச் சிறிய கிராமத்துக்கு உதவிகள் மேற்கொண்டமையை பலரும் இவ் அமைப்புக்கு பாராட்டுக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
அரசியல்வாதிகள் அந்த சிறிய கிராமத்தில் உள்ள 100க்கும் குறைவான வாக்காளர்களை கொண்டமையினாலே உதவிகள் செய்ய முன்வரவில்லை என்று சமூக வலைத்தளத்தில் முன்னாள் பா.உ சந்திரநேரு சந்திரகாந்தன் விமர்சனம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.












.jpg)



