மாணவர்களின் சீரான ஆளுமை வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்கு



இன்றைய சிறுவர்களே நாளைய உலகத்தை உருவாக்கப்போகிறவர்கள்.
ஆக நாளைய தலைவர்களான இன்றைய சிறுவர்களை அவர்களுக்கேயுரிய தனித்துவமான பண்புகளுடன் அவர்களது ஆளுமை விருத்தியை மேம்பாடடையச் செய்ய வேண்டியது பெரியவர்களது மிக
முக்கிய பொறுப்பாகும்.

பிள்ளைப்பருவம் என்பது மானிட வாழ்வின் மிக முக்கிய கட்டமாகும். இப்பருவத்தில் ஒரு பிள்ளையின் ஆளுமை மிகச் சிறப்பாக கட்டமைக்கப்டல் வேணடும். இப்பிள்ளைப்பருவத்திலே தான் அனுபவிக்க உரித்துடைய அத்தனை உரிமைகளையும் அனுபவிப்பதற்குரிய 'ரண சுதந்திரத்தை அப்பிள்ளை பெற்றுள்ளது
.
எந்தவொரு நாட்டினதும் உண்மையான அபிருத்தியென்பது அது அறிவு,பண்பாட்டியல் துறைகளில் பெறும் வளர்சியையே குறித்து நிற்கிறது. அதாவது ஒரு சமூகம் தன்னை கல்வித்துறையில் வளப்படுத்திக் கொள்ளும் போதே அச்சமூகத்தின் உண்மையான அபிவிருத்தியென்பது சாத்தியமாகிறது. ஆக எந்தவொரு சமூகமும் தனது அபிவிருத்தியின் அடித்தளமான கல்வி மீதே கூடுதல் கரிசனை கொள்ள வேண்டும். அதனால் ஒரு நாடு அல்லது சமூகம் அறிவுரீதியாக தன்னை வளப்படுத்திக் கொள்ள வேணடிய பாரிய தேவையுள்ளது. ஒரு நாடு பல்வேறு விதமான வளங்களைப் பெற்றிருந்தாலும் அது பெற்றிருக்கும் மனித வளமே மிகவுயர்ந்த வளமாக கருதப்படுகிறது.

இவ்வுயர்ந்த வளமான மனித வளத்தை செயற்றிறன் மிக்கதாக மாற்றியமைக்க வேண்டிய பாரிய பொறுப்பு காணப்படுகிறது.ஒரு நாட்டின் எதிர்காலத்தலைவர்கள் அந்த நாட்டை எதிர்காலத்தில் வழிநடத்தப் போகிறவர்கள் மாணவர்களே. ஆக இம்மாணவ சமூகத்தை அதன் சிறுபராயத்திலிருந்தே மிகச்சிறந்த ஆளுமைமிக்க பிரஜைகளாக வளர்தெடுக்க வேண்டிய பாரியபொறுப்பு ஆசிரிய சமூகத்தின் தோள்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.ஆகவே இந்த நோக்கத்தை சிறப்பாக பூர்த்தி செய்து கொள்வதற்கு பாடசாலைகளை அளவுரீதியாகவும், பண்புரீதியாகவும் அபிவிருத்தி செய்வதுடன் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் பண்புதரத்தை மேம்படுத்துவதும் மிக முக்கியமானதாகும். ஒரு மாணவனின் கல்வி வளரச்சியை தனியே ஆசிரியர்களால் மட்டும் மேம்பாடடையச் செய்வது சாத்தியமற்றது. இது மாணவர், ஆசிரியர், பெற்றோர், சமூகம் என்ற அனைத்து தரபப்னரினதும் கூட்டு செயற்பாடாகும்.

அந்தவகையில் உளவியல், சமூகவியல் ரீதியாக நாம் நோக்கும் போது ஒரு மாணவனின் ;ஆளுமை வளரச்சியில் உள, சமூகக்காரணிகள் செல்வாக்குச் செலுத்தும் என்பதை மறுக்க முடியாது. மாணவனுக்காக வகைக்கூறும் முழுப் பொறுப்பினையும் ஆசிரியர்கள் மீது சுமத்திடமுடியாது. புரம்பரை ரீதியாக ஒருவன் பெற்றுக் கொள்ளும் நுண்ணறிவு, திறனக்ள் போன்ற உளக்காரணிகளாலும், குடும்பம், சமவயதுக்குழுக்கள், தகவல் ஊடகங்கள் போன்ற சமூகவியல் காரணிகளாலும் ஒருவன் வடிவமைக்கப்படுகின்றான். ஆயினும் பாடசாலைச் சூழலும் அதன் ஆசிரியரும் ஒரு மாணவனின் ஆளுமை விருத்தியில் கூடுதல் பங்களிப்பைச் செலுத்த முடியும்.

ஒரு குழந்தையின் ஆளுமை வளர்ச்சியில் குடும்பத்திற்கு அடுத்ததும், மிக நீண்டகாலமாக குழந்தை தன்னை ஈடுபடுத்திக் கொள்வதுமான சமூக நிறுவனமாக பாடசாலையும், அதன் சூழலும் அமைகிறது. பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இரண்டாம் தர பெற்றோர்களைப் போன்று செயற்பட வேணடியவர்களாவர். மாணவர்களது விருப்பு, வெறுப்புக்கள், திறன்களை மிகச்சர்யாக இனங்காணும் திறன் ஆசிரியர்களுக்கு இருத்தல் அவசியமானதாகும்.

பல்வேறுபட்ட சமூக அடுக்கமைவுகளிலிருந்து பாடசாலைக்கு வரும் மாணவர்கள் நிச்சயம் வேறுபட்ட திறன்களையே பெற்றிருப்பர். வேறுபட்ட நோய்களுக்கு ஒரே மருந்தை வழங்க முடியாது என்பது போல் அவர்களது ஆற்றல் திறமைகளுக்கேற்ப அவர்களது தனியால் வேறுபாடுகளைப் புரிந்து கொண்டு அவர்களுக்குப் பொருத்தமான கற்பித்தல் முறைகளை மேற்கொள்வதும் அதன் மூலம் அவர்களது சீரான ஆளுமை வளர்ச்சிபெற உதவுவதும் ஆசிரியரது கடமையாகும்.

ஆசிரியரது நடை, உடை, பேச்சு, செயற்படும் விதம் போன்றவற்றை மாணவன் ஆரம்ப கட்டத்திலிருந்தே அவதானித்து ஆசிரியரை முன்மாதிரியாக பின்பற்றத் தொடங்குகின்றான. ஆக ஆசிரியர் மாணவர்களது ஆளுமை வளரசசியில் பங்காற்ற வேண்டியவராகிய நிலையில் மாணவர் முன்பு சிறந்த ஆளுமையை வெளிப்படுத்த வேண்டியவராகிறார். மாணவர் தமது அறிவு, திறன், மனப்பாங்கு என்பனவற்றை வளர்த்து நற்குடிமக்களாக வாழ உதவும் பணியே கற்பித்தல் என கல்வி உளவியலாளர்கள் கூறுகின்றனர். குறித்த ஒரு பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர் மாணவர்களிடம் இப்பண்புகளை வளர்க்க அப்பாடத்தை கருவியாகப் பயன்படுத்திக் கொள்ள வேணடும். ஆகவே முதலில் ஆசிரியர் அப்பாடத்தில் தேர்ச்சியுடையவராக இருத்தல் அவசியம்.
மாணவர்களது ஆளுமையை வளர்க்கும் பாரிய பொறுப்பினை சுமந்துள்ள ஆசிரியர் மீது தொடர்பான உளவியல் கோட்பாடுகளையும், கல்வி உளவியல் பற்றிய புலைமைத்துவ ஆற்றலையும் பெற்றிருத்தல் அவசியமாகும்.

கற்பித்தலின் போதும் மாணவர்களை நெற்ப்படுத்தும் வ்டயத்திலும் ஆசிரியர்கள் உளவியல், சமூகவியல் ரீதியிலான அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டியது மிக அவசியமானதாகும். கற்பித்தல் செயன்முறையில் ஈடுபடும் ஒரு ஆசிரியரின் மிக முக்கிய பொறுப்பு முதலில் அம்மாணவர்களை இனங்காணுதலாகும். மாணவரை இனங்காணுதல் எனும் செயற்பாடானது மாணவர்களின் ஆளுமையைப் பாதிக்கும் உள, சமூகக்காரணிகளை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய துணைபுரிவதாகும்.
பொதுவாக மாணவர்களின் ஆளுமைப் பண்புகளை தீர்மானிக்கும் அல்லது பாதிக்கும் காரணிகளை நாம் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
01)அகக்காரணிகள்- உடல்குறைபாடு, மந்தப்புத்தி, தாழ்வுச்சிக்கல், எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை இழந்திருத்தல் போன்ற விடயஙக்ளைக் குறிப்பிடலாம்.
02)புறக்காரணிகள்- ஒரு மாணவனின் ஆளுமையைப் பாதிக்கும் புறக்காரணிகளாக அவனது குடும்பம், பாடசாலை, சமூகம் போன்றவை அமைகின்றன.

குடும்ப அங்கத்தவர்களின் பிரிவு, வீட்டு வன்முறை, பெற்றோர் அடக்குமுறை, பெற்றோரிடமிருந்து போதிய அன்பு, ஆதரவு போன்றவற்றைப் பெற முடியாத நிலை போன்ற விடயஙக்ள் ஒரு மாணவனின் ஆளுமையில் பாதிப்புக்களை ஏற்படுத்தும். அதே போன்று பாடசாலைச் சூழலில் ஆசிரியர்களின் கடினமான தண்டனைகள், பாதகமான கல்விச் சூழல், பொருத்தமற்ற கவின நிலை போன்றனவும் அம்மாணவன் வாழும் சமூகத்தில் அவன் எதிர்நோக்கும் இடப்பெயர்வு, யுத்தம், இயற்கை அனர்த்தங்கள், கலாச்சார சீரழிவு போன்ற விடயஙக்ளும் ஒரு மாணவனின ;ஆளுமையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவையாகும். ஆக இந்நிலையில் ஆசிரியரானவர் அம் மாணவனின் உள, சமூக நிலைகளை அறிந்து மாணவர்களின் சீரான ஆளுமை வளர்ச்சியில் பங்காற்ற வேணடி;யவராகிறார். மேலும் மாணவர்களின் சீரான ஆளுமை  வளர்ச்சியில் ஆசிரியரனவர் நிலைமாற்று வகிபாகத்தினூடாக வளவாளராக செயற்பட்டு மாணவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்புக்களை ஆற்ற வேணடியவராகிறார்.

ஆக எதிர்கால சமூகத்தை வடிவமைக்கும் பாரிய பொறுப்பினை சுமந்துள்ள ஆசிரிய சமூகம் புதிய புதிய விடயங்களை இற்றைப்படுத்திக் கொள்பவர்களாகவும் தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் மிக முக்கிய தேவையாகும்.

இபுன் சஹீத் நுஜைலா
கல்வியியல் சிறப்புக்கற்கை,
2ஆம்வருடம், 1ஆம்அரையாண்டு,
கிழக்குப் பல்கலைக்கழகம்.