மக்கள் சேவையை பாராட்டி மாவட்ட அரசாங்க அதிபரை கௌரவிக்கும் நிகழ்வு



மக்கள் சேவையை பாராட்டி மாவட்ட அரசாங்க அதிபரை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது 

மட்டக்களப்பு ரொட்டரி கழகத்தில் 59 வருட நிறைவு நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பு ரோட்டரி கழக மண்டபத்தில் நடைபெற்றது 

ரொட்டரி கழக தலைவர் பார்த்தீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ரோட்டரி கழகத்தின் 59 வருட நிறைவு நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் ரோட்டரி கழக சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்வும் ரோட்டரி கழக உறுப்பினர்களின் சேவை நலனை பாராட்டி கௌரவித்து விருதுகள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது 

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார்  மாவட்ட நிர்வாக சேவையில் மக்களுக்காக சிறந்த சேவையை ஆற்றியமைக்கு அரசாங்க அதிபருக்கு பொன்னாடை  போர்த்தி விருது வழங்கி கௌரவித்தனர் 

இந்நிகழ்வில் மட்டக்களப்பு ரோட்டரி கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்