1979 ஆம் ஆண்டு யுனிசெப் நிறுவனத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட மாதிரி ஆய்வொன்றில் மாணவர்கள் ஏன் பாடசாலைக் கல்வியில் இடைவிலகல் என்ற விடயத்தை மேற்கொள்கின்றனர்? என்று கண்டறியப்பட்டன. பொருளாதார கஷ்டம் காரணமாக தேவைகளை நிறைவேற்ற முடியாமல் இருத்தல், பாடசாலைக்குச் செல்கின்ற மாணவர்களின் குடும்பத்தில் பொருளாதாரப் பிரச்சனை காணப்படும் என்றால் தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் அதாவது, பாடசாலைக்கு செல்வதற்காக தேவையான பாதணிகள், கொப்பிகள் போன்றன மற்றும் பரீட்சைக் கடட்ணம் என்பன வாங்குவதற்கு இயலாமல் பாடசாலையினை விட்டு இடைவிலகுகின்றார்கள். மாணவர்கள் இடைவிலகுவதற்கு குடும்பத்தில் ஏற்படும் பொருளாதார கஷ்டமும் ஒரு காரணமாக அமைகின்றது.
குடும்ப வறுமை காரணமாக ஏதாவதொரு தொழிலிற்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுதல், வீட்டுச் சூழலில் ஏற்படும் குடும்ப வறுமை காரணமாகவும் வேறு எவரினதும் உதவி இல்லாத காரணத்தினாலும் பாடசாலை செல்கின்ற மாணவர்கள் சிறுவயதிலே தொழிலுக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது.
இதன் காரணத்தினால் பாடசாலைக்குச் செல்லாது இடைவிலகல் ஏற்படுகின்றது. இளம் வயதிலே பாடசாலை செல்லாது தொழிலுக்குச் செல்வது சட்டப்படி குற்றமாகும். இருப்பினும் குடும்ப சூழ்நிலை காரணமாக தங்களால் முடிந்த தொழிலுக்குச் செல்கின்றனர். பிள்ளைகள் சிறுவயதிலே உடல், உள கதியாக நோய் தொற்றுக்குள்ளாகின்றனர். இதனால் நீண்ட நாள் பாடசாலைக்குச் செல்ல முடியாமல் போகும் நிலை ஏற்படுகின்றது. நீண்ட நாள் விடுமுறை கழித்து மீண்டும் பாடசாலைக்குச் சென்று கல்வியினை மேற்கொள்வது கடினமாக இருக்கும் காரணத்தினாலும், பாடசாலைக்கு செல்ல விரும்பாத காரணத்தினாலும் பெற்றோர்கள் பிள்ளைகளின் உடல், உள நலத்தின் மீது அக்கறையுடன் இருப்பதனாலும் பாடசாலைக்கு அனுப்பாமல் தங்களது பிள்ளைகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். இதனால் மாணவர்கள் இடைவிலகல் செயல்பாட்டை எதிர் நோக்க வேண்டியுள்ளது. பாடங்களின் மீதோ அல்லது ஆசிரியர் மீதோ மாணவரகளுக்கு வெறுப்படையும் சூழ்நிலை ஏற்படுகின்ற நிலையின் போது மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்கு விரும்பான்மையினாலும் அவர்களது கல்வி நிலை இடையில் பாதிப்படைகின்றது.
அதாவது ஆசிரியர் சக மாணவர்கள் முன்னிலையில் மாணவர்களை கண்டிக்கும் பொழுது அதனை ஏற்றுக் கொள்ள முடியாத மாணவர்கள் ஆசிரியர் மீது வெறுப்படைந்து பாடசாலைக்கு செல்ல விருப்பம் ஏற்படாமல் போகின்றது. இதனால் அவர்களது பாடசாலைக் கல்வி பாதிப்படைகின்றது. மாணவர்கள் கல்வியை தொடர்வதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அப்பிரச்சினைக்கு முகம் கொடுக்க முடியாத நிலையில் மாணவர்கள் பாடசாலையை விட்டு இடை விலகுகின்றனர். இதனால் சமூகத்திலும் பல்வேறு தாக்கங்கள் ஏற்படுகின்றன. மாணவர்கள் இடைவிலகுவதற்கான காரணங்களாக பின்வருவன காணப்படுகின்றன.
- பரீட்சை முறைகளும் கலைத்திட்டமும்
- மாணவர்களின் வரவின்மை
- பரம்பரைத் தொழிலில் ஆர்வம்
பரீட்சை முறைகளும் கலைத்திட்டமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையனவாகக் காணப்படுகின்றன. இவற்றின் நோக்கங்கள், பாடவிடயங்கள், மதிப்பீட்டு முறைகள் ஆகியவை இயல்பிலேயே ஒன்றுடன் ஒன்று இணைந்து காணப்படுகின்றது. பரீட்சை முறை ஏதோ ஒரு வகையில் பிரச்சினைக்கு உரியதானால் கலைத்திட்டத்தின் உள்ளடக்கத்திலும் உபயோகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். கல்விக் கொள்கையானது பின்வரும் இரு பிரிவுகளைக் கொண்டுள்ளது. எல்லோருக்கும் இலவசமாக கல்வியளித்தல், கல்வியில் சம சந்தர்ப்பம் அளித்தல். ஒரு ஜனநாயக நாட்டில் மக்களுக்கு அளிக்கக்கூடிய அதியுயர் செல்வத்தினை அளிப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. உண்மையில் கல்வியை செயற்படுத்துகையில் இது நிறைவேறாமையை நாம் காணக்கூடியதாக உள்ளது. இதில் ஒரு காரணமாக வளப்பற்றாக்குறை காணப்படுகின்றது.
பாடசாலைப் புத்தகங்களை அச்சிடல், விநியோகித்தல், பாடவிதான மாற்றம், ஆசிரியர் பயிற்சி, கல்வியை நவீனமயப்படுத்தல் போன்றவற்றுக்கு கூடுதலான அளவு பணம் தேவைப்படுகின்றது. இவற்றைப் பெற்றுக் கொள்ளல் பெரும் பிரச்சினையாக உள்ளது. மேற்கூறப்பட்டவற்றிக்கான வளங்களை அதிகரித்தல், உள்ள வளங்களில் இருந்து உச்சப்பயனைப் பெறல், வளப்பகிர்வு போன்றவற்றை முறையாகச் செய்ய வேண்டும்.
வளங்களின் உபயோகம் அவற்றை வெவ்வேறு துறைக்கு ஒதுக்குதல் போன்ற நடவடிக்கைகளில் பல குறைபாடுகள் உள்ளன. கல்வித்துறையில் உள்ள மனிதவளம், பௌதீகவளம் என்பவற்றிலிருந்து அனேக சந்தர்ப்பங்களில் உரிய பயன் பெறப்படுவதில்லை. தகுதியும் திறமையும் உள்ள அனைவருக்கும் பதவிகள் கிடைப்பதில்லை. திறமையின் அடிப்படையில் அன்றி வேறு அடிப்படையில் தெரிவு இடம்பெறுவதையும் அவதானிக்கலாம். கல்வி நிறுவனத்திற்கு சொந்தமான வளங்கள் சரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. சில பாடசாலைகளில் ஆய்வுகூட கருவிகள் உள்ளன ஆனால் ஆய்வுகூடமோ அல்லது விஞ்ஞானம் கற்பிக்க ஆசிரியர்களும் இல்லை. சில பாடசாலைகளில் பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியர்கள் இருந்தும் விஞ்ஞான ஆய்வுகூட கருவிகள் இல்லை.
சில பாடசாலைகளில் வாசிப்பதற்கு புத்தகங்களோ வாசிகசாலையோ இல்லாமல் இருக்கும். ஆனால், மாணவர்கள் வாசிக்க ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். வாசிக்க ஆர்வமில்லாத பாடசாலைகளில் புத்தகங்கள் இருக்கும். இவை பாடசாலைகளில் கல்விப் பிரச்சனையாக உள்ளது. கல்விப் பிரச்சனைகள் ஒருபுறம் இருக்கும் பொழுது பல்வேறுபட்ட காரணங்களால் மாணவர்கள் பாடசாலையை விட்டு இடை விலகலினை மேற்கொள்கின்றனர்.பின்தங்கிய சூழலில் இருந்து பாடசாலைக்கு வருகின்ற மாணவர்கள் குடும்ப சூழல், வறுமை போன்ற காரணங்களினால் பாடசாலையை விட்டு இடைவிலக வேணடிய சூழ்நிலை ஏற்படுகின்றது.
பின்தங்கிய சூழலில் இருந்து வருகின்ற மாணவர்களின் பெற்றோர்கள் கல்வியறிவு குறைவானவர்களாக காணப்படுவார்களாயின் மாணவர்களை பாடசாலை செல்லவிடாது இளம் வயதில் திருமணம் செய்து வைக்கின்றார்கள். பாடசாலைக்கு செல்வதற்கும் கற்றலில் ஆர்வம் உள்ள மாணவர்கள் கூட குடும்ப சூழல்நிலை காரணமாக பாடசாலையை விட்டு இடைவிலகலை மேற்கொள்கின்றனர். இதனால் எதிர்காலத்தில் கல்வி மான்கள் இழக்கப்படுகின்றார்கள். 'இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள்' பாடசாலையை விட்டு மாணவர்கள் இடைவிலகலை குறைப்பதன் மூலம் கல்வியறிவு கொண்ட சமூகம் எதிர்காலத்தில் உருவாக்கப்படும்.
ச.கிருஸ்ணவேனி
கல்வியற்துறை
கிழக்குப் பல்கலைக்கழகம்