மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய சாதனையாளர் பாராட்டு நிகழ்வு இன்று(17.05.2025) குறிஞ்சாமுனை சக்தி வித்தியாலயத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் தலைமையில் இடம் பெற்றது
இதன் போது தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் மாவட்ட வெட்டுப் புள்ளிகளை பெற்ற மாணவர்கள், சாதாரண தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள், பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள், தமிழ்மொழித்தினம், விளையாட்டு, சமூக விஞ்ஞானம், அழகியல் போன்ற பல்வேறு துறைகளில் தேசிய, மாகாண மட்டங்களில் சாதித்த சாதனையாளர்கள் 384பேர் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
வலய வரலாற்றில் முதன்முதலாக இப்பாராட்டு நிகழ்வு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் தேசிய மட்ட பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை வெளியிட்ட பாடசாலைகளும் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு ஓய்வு நிலை மாகாணக் கல்வி பணிப்பாளர் அகிலா கனகசூரியம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தமையுடன் தேசிய சாதனைகளை வெளிக்காட்ட காரணமாகவிருந்த ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர், மாணவர்கள் அதிதிகளாக அழைக்கப்பட்டமை எடுத்துக்காட்டத்தக்கது.