
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள மகிழவட்டவான் மகா வித்தியாலயத்தில் கடந்த 2024 இல் க.பொ.த(உ/தரப்) பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மகிழவட்டவான் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
மகிழவட்டவான் இந்து இளைஞர் மன்றத்தின் அனுசரணையில் சி.குலேந்திரன் ஆசிரியரின் ஒழுங்கமைப்பில் பாடசாலை அதிபர் ம.கருணதாசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மாணவர்களுக்கு பதக்கங்களும் நினைவுச்சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வின் போது கற்பித்த ஆசிரியர்களும் பாராட்டப்பட்டனர்.