மட்டக்களப்பு மார்க்கமூடான ரயில் சேவையானது தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த மீனகாயா இரவுநேர விரைவு ரயில் தடம் புரண்டுள்ளதனால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
ஹதராஸ் கொடுவா மற்றும் ஹபரானா ரயில் நிலையங்களுக்கு இடையில் காட்டு யானைகளுடன் குறித்த ரயில் மோதுண்டே இவ்வாறு தடரம் புரண்டுள்ளது.
எவ்வாறெனினும், பாதிக்கப்பட்ட ரயில் சேவைகளை வழமைக்கு கொண்டு வரும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.