கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக கலாநிதி கோபாலரத்தினம் பதவியேற்பு!

(வி.ரி.சகாதேவராஜா)

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக. கலாநிதி மூ.கோபாலரத்தினம்(மூகோ) நேற்று (7) பதவியேற்றுக்கொண்டார்.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

இலங்கை நிருவாக சேவை விசேட தர அதிகாரியான இவர், தற்போது கிழக்கு மாகாண சபையின் பேரவைச் செயலாளராக கடமையாற்றிருந்தார். அதற்குமுன்னர் திறைசேரி முகாமைத்துவ திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக சேவையாற்றியிருந்தார். 

1995 ஆம் ஆண்டு இலங்கை நிருவாக சேவை அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டவராவார்.
இவர், தம்பலகாமம், ஏறாவூர் நகர் ,பட்டிப்பளை, கல்முனை மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராகவும், குச்சவெளி, நாவிதன்வெளி,திருக்கோயில் மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராகவும் பணியாற்றி மக்களின் நன்மதிப்பைப்பெற்றிருந்தார்.