முள்ளிவாக்கால் நினைவேந்தல் தொடர்பான கலந்துரையாடலில் குழப்ப நிலை


(ரூத் ருத்ரா)

தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்த முள்ளிவாக்கால் நினைவேந்தல் தொடர்பான கலந்துரையாடலில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது
.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கருத்தை ஏற்றுக்கொள்ளாத அரசியல் கலப்படம் வேண்டாம் எனக் கூறி முள்ளிவாய்க்காலில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை கலக்கவேண்டாம் எனக் கூறி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரை கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் வெளியேற்றினார்கள்.

இது தொடர்பான விபரம் வருமாறு..
மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளன்று தமிழ் தேசிய பரப்பில் இருக்கின்ற அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவிகளை இரத்து செய்துவிட்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்திற்கு வந்து சத்தியப்பிரமானம் செய்யுமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரேழுச்சி இயக்க இணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமி பகிரங்க அழைப்பு விடுத்தார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பான கலந்துரையாடல் முல்லைத் தீவு வட்டுவாகல் அம்மன் கோவிலுக்கு முன்னால் அமைந்துள்ள பொதுநோக்கு மண்டபத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது.

இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் முன்வைத்த கருத்தானது,
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் 13யும் ஒற்றையாட்சியையும் ஏற்றுக்கொள்கின்றவர்களை ஏற்பாட்டுக்குழு முற்றுமுழுதாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார். இதன்போது வடக்கு கிழக்கு முன்னேற்றக் கழகத் தலைவர் கு.வி.லவகுமார் இவரது கருத்துக்கு மாற்றுக் கருத்தாக தெரிவிக்கும்போது
ஓற்றையாட்சிக்கு கீழ் உள்ள அரசாங்கத்திடமே நீங்கள் தங்களது சத்தியப்பிரமானங்களை செய்துள்ளீர்கள் எனவே தங்கது பதவிகளை இராஜினாமா செய்து விட்டு மக்களை வழி நடத்துகின்ற தலைவர்களாக நீங்கள் வருகின்றபோது உங்கள் பின்னே மக்களது விடுதலைக்காக நாங்கள் வரத்தயாராகவுள்ளோம். 13 ஆவது திருச்சட்டத்தை மக்களுக்குள் திணித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அரசியல்மயமாக்கவேண்டாம் இது ஒரு உயிர் நீத்த மக்களது நினைவு நாள். என்று கூறினார்.இதன்போது கூட்டத்தில்அமைதியின்மை ஏற்பட்டது. ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்தும் முகமாக வேலன் சுவாமி இவ்வாறு தமது கருத்தினை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றும்போது தெரிவித்ததாவது,
இந்த ஒற்றையாட்சிக்குள் எதுவும் கிடைக்கப்போவதில்லை சர்வதேச பரிகார ரீதியாக பொதுசன வாக்கெடுப்புத்தான் வேண்டும். எங்களுடைய இனத்தின் தலைவிதியை நாங்களே தீர்மானிப்போம் 13 ஜ நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம்.13 எங்களுக்கு தேவையில்லை சமஸ்டி கட்டமைப்புதான் தேவையென்று எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலே குரல் எழுப்புகின்றனர். சில விடயங்களை உணர்வுகளை இலக்குகளை நோக்கி நகர்த்தும்போதுதான் சமஸ்டி கட்டமைப்பை கேட்கும்போது அதற்கும் முரன்படுகின்றோம்.பல விதமான குழப்பங்களை எங்களுடைய அரசியல்வாதிகளே செய்து கொண்டிருக்கின்றனர்.வார்த்தைகளை வைத்தே பிரச்சினைப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

எங்களுடைய தமிழ் பரப்பிலே இருக்கின்ற உண்மையான தமிழ் தேசிய அரசியல்வாதிகளாக இருக்கட்டும் போலியான தேசியம் பேசுகின்ற அரசியல்வாதிகளாக இருக்கட்டும் அனைவரும் ஒரு கொள்ளைக்கு கீழே உடன்பட்டு வாருங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கபட்டபோது ஒரே தலைமை இருந்தது.இன்று அந்த ஒரே தலைமை இருக்கிறதா? இல்லை.
எனவே மே-18 அன்று முள்ளிவாயக்கால் நினைவேந்தல் நிகழ்வன்று தமிழ் தேசிய பரப்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை இரத்துச் செய்து சத்தியப்பிரமாணம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தின் இறுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சியினருக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
கூட்டத்தில் தீர்வு எதுவும் எட்டப்படமுடியாத நிலையில் சிவில் அமைப்புக்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பினரால் கேட்க்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கமுடியாத நிலையில் மண்டபத்தினை விட்டு வெளியேறினார்கள்.

இதனையடுத்து மீண்டும் கூட்டமானது கூட்டப்பட்டு வேலன்சுவாமியை தற்காலிக இணைப்பாளராக் கொண்டும் மாவட்டத்திற்கு ஒரு தற்காலிக இணைப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இவர்கள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட நிர்வாகத்துடன் இணைந்து எதிர்கால நடவடிக்கைளை முன்னெடுப்பதென தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.