பொலிஸார் பொதுமக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்!ஜூலை 9 ஆம் திகதி கோட்டையில் உள்ள ஜனாதிபதியின் மாளிகைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த 40 பேரை அடையாளம் காண்பதற்காக, பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார் 40 பேரின் மற்றுமொரு புகைப்படத்தை இன்று வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்ய கொழும்பு மத்திய பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதுவரை அடையாளம் காணப்படாத சந்தேக நபர்களின் புகைப்படங்கள் சமூக ஊடக தளங்கள் மற்றும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் மூலம் பெறப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

குறித்த புகைப்படங்களில் சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் 071-8591559, 071-8085585, 011-2391358, அல்லது 1997 (Hotline) ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும்,முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்களை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார் பல புகைப்படங்களை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.