வைத்தியரின் அலட்சியத்தால் உலகை விட்டு பிரிந்த புது மணப்பெண் !வைத்தியரின் அலட்சியத்தால் உயிரிழந்த யுவதி ஒருவர் தொடர்பில் ஜா-எல தெலத்துர பிரதேசத்தில் இருந்து செய்தியொன்று பதிவாகியுள்ளது.

ஜா-அல தெலத்துரயை வசிப்பிடமாகக் கொண்ட புத்திகா ஹர்ஷனி தர்மவிக்ரம என்ற யுவதி கடந்த ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி கனவுகளுடன் தனது திருமண வாழ்க்கையை ஆரம்பித்தார்.

ஆனால், திருமணமாகி 17 நாட்களுக்குப் பிறகு, சிறு நோய் நிலமை காரணமாக வைத்தியசாலைக்குச் அழைத்துச் செல்லப்பட்ட ஹர்ஷனி, எதிர்பாராதவிதமாக தனது வாழ்க்கையிலிருந்து விடைபெற நேரிட்டது.

ஹர்ஷனியை பரிசோதித்த வைத்தியர், ஹர்ஷனியின் பித்தப்பையின் ஒரு பக்கத்தில் கல் இருப்பதாகவும், அவருக்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அதன்படி கடந்த 31 ஆம் திகதி வத்தளையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

எனினும், சத்திர சிகிச்சையின் பின்னர் ஆபத்தான நிலையில் இருந்த அவர், ராகம போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

25 நாட்களாக ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 25 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஹர்சினியின் பிறந்த நாளான நேற்றைய தினம் அவரது சடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

தனியார் வைத்தியசாலையின் வைத்தியர் அலட்சியமாக சத்திர சிகிச்சை செய்ததாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில், ஹர்ஷனியின் மரணத்திற்குப் பிறகு சத்திர சிகிச்சை செய்த வைத்தியர் குறித்த சர்ச்சைக்குரிய செய்திகளும் சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்துள்ளது.

இதன்படி, இது தொடர்பில் சுகாதார அமைச்சின் தனியார் வைத்தியசாலை ஒழுங்குமுறை சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜி.விஜேசூரியவிடம் நாம் வினவியபோது, ​​குறித்த தனியார் வைத்தியசாலை மற்றும் வைத்தியர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.