மட்டக்களப்பு பாவக்கொடிச்சேனையில் பொங்கல் தினத்தில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!



(மண்டூர் ஷமி)

கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பாவக்கொடிச்சேனையில் பிரதேசத்தில் சிறுவன் ஒருவர் தூக்கிட்டு நேற்று (15) தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பழைய சந்தை வீதி 10ம் வட்டாரம் கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச்சேர்நத (16) வயதுடைய பத்மராசா-வேதநாயகம் என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தந்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார்.

கடந்த (14)ம் திகதி தனது சகோதரியிடம் பொங்கல் தினத்திற்று ஆடைகள் வாங்குவதற்காக பணத்தை பெற்றுக்கொண்டு பின்னர் பொங்கல் தினத்தன்று மாமாவின் பராமரிப்பில் உள்ள நெல்லிக்காடு பிரதேசத்தில் உள்ள தோட்ட வளாகத்திற்கு போவதகாக்கூறி சென்றவர் அங்கு யானைகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு அங்கு மரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஏணியில் ஏறி தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக காணப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு பதில் நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவான சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சம்ப இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.; கொக்கட்டிச்:சோலை பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.