சுற்றுலா விடுதி ஒன்றில் இளம் பெண் மற்றும் இளைஞனின் சடலங்கள் மீட்பு !


தங்கள்ளயில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் இளம் பெண் மற்றும் இளைஞன் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த ஹோட்டலில் பணிபுரியும் இளைஞனும் அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் சேர்ந்த யுவதியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இருவருக்கும் இடையே காதல் தொடர்பு இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

குறித்த இளைஞன் சிறுவயதிலிருந்தே ஹோட்டலில் வளர்ந்தவர் எனவும் குறித்த இளைஞனே ஹோட்டலை கவனித்து வருவதாகவும் தெரிவித்தப்படுகின்றது.

குறித்த இளைஞன் நேற்று இரவு முச்சக்கர வண்டியில் அம்பலாந்தோட்டை பகுதிக்கு சென்று உயிரிழந்த சிறுமியை விடுதிக்கு அழைத்து வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவரும் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் தங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.